உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி - போப் சந்திப்பு குறித்து கேலி: மன்னிப்பு கோரியது கேரள காங்.,

பிரதமர் மோடி - போப் சந்திப்பு குறித்து கேலி: மன்னிப்பு கோரியது கேரள காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி - போப் பிரான்சிஸ் சந்திப்பு குறித்து கேலியாக பதிவு செய்திருந்த கேரள காங்கிரஸ், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pgb3hdq2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார். மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளது. அதில், “கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிசுக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. இந்த பதிவு சர்ச்சையான நிலையில், கிறிஸ்தவர்களை கேரள காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. போப் - மோடி சந்திப்பை கேலி செய்து பதிவிட்டதற்கு கேரள காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோரியது. ''கிறிஸ்தவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்'' என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

tmranganathan
ஜூன் 19, 2024 07:37

உருப்படாத கட்சிதான் காங்கிரஸும் கேரளா காங்கிரஸும். வெட்டிப்பயல்கள். மலையாளிகள் இவர்களால் அவதியுறுகிறாரகள்.


K.Muthuraj
ஜூன் 18, 2024 11:04

என்னைக்குமே வராது.


kulandai kannan
ஜூன் 18, 2024 08:50

கிறித்தவர்களைக் கண்டு அவ்வளவு பயம்?


naranan
ஜூன் 17, 2024 19:44

காங்கிரஸின் புத்தி எப்போதுமே கீழ்த்தரமான புத்தி தான். 99க்கே இந்த ஆட்டம் போடும் ரவுடிகளின் கூடாரம் தான் இது.


Jysenn
ஜூன் 17, 2024 15:38

Kooda Natpu in Tamilnadu has exerted its effect.


சிவம்
ஜூன் 17, 2024 15:25

எக்ஸ் வலைத்தளத்தில் சரியாகத்தானே பதிவிட்டிருந்தீர்கள். எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.


Sivak
ஜூன் 17, 2024 18:05

ஒட்டு முக்கியம் இல்ல ...


ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 14:26

சோனியா ஒரு கத்தோலிக்கர். அவரது கட்சியே போப்பாண்டவரைத் தான் தாக்கியுள்ளது. பாவமன்னிப்பு கிடைப்பது கடினம்.


Senthoora
ஜூன் 17, 2024 15:23

இங்கே பிரிவினைவாதம் பேசுவார்,


ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 14:21

கேரள காங்கிரஸ் ஒரு மதசார்புள்ள கிறித்தவக் கட்சி. அதன் மூன்று பிரிவுகளில் இரண்டு இப்போது பிஜெபி ஆதரவாளர்கள்.


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 17, 2024 14:06

இப்பவாவது ... மனிதர்களுக்கு சொரணை வருமா?


rsudarsan lic
ஜூன் 17, 2024 14:06

ஒரு ரெண்டு வருஷம் இந்த கட்சியை தடை செய்தால் என்ன


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை