உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 முறை அழைக்கும் கோர்ட் நடைமுறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டம்

3 முறை அழைக்கும் கோர்ட் நடைமுறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் பெயர்களை, மூன்று முறை உரத்த குரலில் அழைக்கும், பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, சட்டத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: தற்போதுள்ள சட்டத்தின்படி, நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளை, மரியாதை இன்றி உரத்த குரலில் அழைக்கும் நடைமுறை உள்ளது. பகிரங்கமாக பெயர் சொல்லி அழைப்பதால், அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. நியாயம் கேட்டு, நீதிமன்றத்தை நாடுபவர், நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்துக்கு உதவும் நோக்கில், சாட்சியம் அளிக்க வருவோரை கவுரவத்துடன் நடத்த வேண்டும். எனவே பெயர் சொல்லி அழைக்கும் பழைய நடைமுறைக்கு, முடிவு கட்ட அரசு முன் வந்துள்ளது. இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. சட்டம் மற்றும் கொள்கைகள் - 2023க்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. விசாரணை நேரத்தில், குற்றவாளி கூண்டுகளில், சாட்சிகள், குற்றவாளிகள் அமர்ந்து கொள்ள வசதி செய்வது உட்பட பல மேம்பாடுகள் திருத்த சட்டத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஜூலை 05, 2024 20:45

மை லார்டு விசாரணை நேரத்தில், குற்றவாளி கூண்டுகளில், சாட்சிகள், குற்றவாளிகள் அமர்ந்து கொள்ள வசதி செய்வது போன்று குற்றவாளிகளுக்கு கூட்டுக்குள்ளேயே படுத்துறங்கவும் வசதி செய்தால் வேண்டும்போது அவர்களை எழுப்பி விசாரணை செய்ய எதுவாக இருக்குமே


rama adhavan
ஜூலை 05, 2024 18:54

என்ன பைத்தியக்காரத்தனம். ஓபன் கோர்ட் என்பதே தேவை அற்ற ஒன்று. நீதிபதி அறையிலேயே வாதி, பிரதிவாதி, அவர்களது வக்கீல் ஒருவர் போதுமே. ஏனையோர் திரையில் பார்க்கட்டும். கூட்டம் எதற்கு?


Anantharaman Srinivasan
ஜூலை 05, 2024 18:42

தேவையற்ற வேலை. வழக்குகளை இழுத்தடிக்காமல் இருக்க உருப்படியான வழியை காண்க..


கோவிந்தராஜ் கிணத்துக் கடவு
ஜூலை 05, 2024 17:58

இது பத்தாது மாலை மரியதயும் செய்யனும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை