உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை சர்வாதிகாரத்திடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்: கெஜ்ரிவால்

நாட்டை சர்வாதிகாரத்திடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்: கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 50 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜாமின் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார். டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கெஜ்ரிவாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை. தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமின் கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமின் மனு தாக்கல் செய்து வந்தார். அவரை ஜாமினில் விடுவதற்கு அமலாக்கத்துறையும ஒவ்வொரு முறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனிடையே ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.இதையடுத்து 50 நாள் சிறைவாசத்திற்கு பின் இன்று( மே.,10 ம் தேதி) இரவு 7 மணியளவில் திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலை வழி நெடுகிலும் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர் பேசியதாவது: இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி. சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். கடவுளின் ஆசி எனக்கு உண்டு. நாளை (11-ம் தேதி) அனுமன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்த உள்ளதாகவும், கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். கெஜ்ரிவால் விடுதலையை மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஊழல் வழக்கில் ஜாமினில் விடுதலையான டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

G Mahalingam
மே 13, 2024 08:54

காலீஸ்தான் ஆதரவில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றியது இப்போது பஞ்சாப் மக்கள் உணர்கிறார். அது போல இலவச பஸ் மின்சார தண்ணீர் சிறிய வசிப்பவர்களுக்கு மட்டுமே லாபம் நடுத்தர பணக்காரர்களுக்கு இலவசம் இருக்கு ஆனால் இல்லை


Syed ghouse basha
மே 11, 2024 15:34

சூப்பர் அருமை வாழ்க இந்தியா வெல்க இந்தியா


kumarkv
மே 13, 2024 12:03

இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்


karthik
மே 11, 2024 08:37

சொல்ற மாதிரி சர்வாதிகாரி கையில் இருந்தால் எல்லாம் இந்நேரம் ஜாமினில் வெளி வந்திருக்க முடியாது மக்களை ஏமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிராய் முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தப்பித்துக்கொண்டு இருந்திருக்க முடியாது


kannan sundaresan
மே 11, 2024 05:26

9 முறை சம்மன் அனுப்பியும் விசாரனைக்கு வராத ஆள், சர்வாதிகாரத்தை பற்றி பேச தகுதி இல்லை


Palanisamy Sekar
மே 11, 2024 05:24

இந்திய அளவில் ஊலவாதிகளிடமிருந்து காப்பாற்ற தவறிய தமிழகம் தான் இந்தியா உருப்படாமல் போக காரணமே ஒரு நீதிபதியே அசந்துபோய் விஞ்ஞான ஊழல்வாதிகள் என்று கருணாநிதியை கொடூரமாக விமர்சித்தும் இங்கே நாம் மீண்டும் அவரையும் அவர் சார்ந்த ஊழல்குடும்ப உறுப்பினர்களையும்தானே தேர்வு செய்தோம் பத்தாண்டுகள் கழித்து அகோரா பசியோடு வர்றாங்க தயவுசெய்து தேர்வு செய்யாதீங்கன்னு எவ்வளவோ சொன்னோம் மக்கள் காசுக்காக ஓட்டுக்களை விற்று மீண்டும் திமுகவுக்கு சந்தர்ப்பம் கொடுக்க, மறுபடியும் அதே மக்கள் பதறுகின்றார்கள் கதறுகின்றார்கள் இவர்களின் ஊழலைக்கண்டு இதே நிலைமைதான் கெஜ்ரிவால் விஷயத்திலும் மக்கள்தான் இப்படி தவறுகள் செய்கின்றார்கள் என்றால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக வந்த பாஜகவும் அந்த ஊழல்வாதிகள் மேல் அரசியல் செய்யாமல் தேமேன்னு இருந்து போனார்கள் கடுமையான தண்டனையை ஊழல்வாதிகள் மீது எடுக்க தவறினார் மக்களுக்கு நன்மையை செய்வதில் கவனம் செலுத்தியதால் ஊழல்வாதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் இப்போது அவர்கள் உத்தமன் போல பேசி யோக்கியர்களை திட்டுகின்றார்கள் டெல்லியில் மக்களை மீண்டும் முட்டாள்களாக்க பவனி வருகின்றார் நூறு கோடிக்கு அதிகமாக வீட்டை புதுப்பித்த வேஷதாரி கெஜ்ரிவினால் மனசு வலிக்குதுங்க இந்த பாஜகவை நினைத்தும் கூட இரண்டுமுறை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தும் உள்துறை அமைச்சருக்கு ஈமெயில் செய்தேன் அரசியல் செய்யாமல் போனீர்கள் என்றால் அரசியலில் உங்களை மக்கள் மத்தியில் கேவலம் செய்வார்கள் என்று யார் சொல்வது தலைமையிடத்தில்? பாஜக வுக்கு இன்னும் அரசியலே தெரியல கெஜ்ரிவால் இன்னும் அசிங்கப்படுத்துவார்


J.V. Iyer
மே 11, 2024 04:17

கொள்ளையர்களிடமிருந்து டெல்லி, பஞ்சாபை முதலில் காப்பாற்றவேண்டும் இவனை எப்படி வெளியே விட்டார்கள்? நீதி எங்கே போயிற்று?


Bala Paddy
மே 11, 2024 01:15

நாட்டில் சர்வாதிகாரம் இருந்தால் நீ இப்படி கூவ முடியாது உச்ச நீதி மன்றத்தை ஒழுங்கு படுத்த நேரம் வந்து விட்டது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்


Bala Paddy
மே 11, 2024 01:15

நாட்டில் சர்வாதிகாரம் இருந்தால் நீ இப்படி கூவ முடியாது உச்ச நீதி மன்றத்தை ஒழுங்கு படுத்த நேரம் வந்து விட்டது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்


K.Balasubramanian
மே 10, 2024 23:19

நமது நாட்டை , முதலில் ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஊழல் பெருசாள்ளிகள் சர்வாதிகாரிகள் என்று கூறுகிற இவர்கள் , முதலில் சவ்க்கு சங்கர் , சாதிக் பாட்சா , அண்ணா நகர் ரமேஷ் என்பவர் குடும்பம் , தா கிருஷ்ணன் இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் செய்த்துவிட்டு , பேசவும் இந்தியாவின் தேவை , காமராஜர்க்சலும் , கக்கண்களும் , லால்பகதூர் , அப்துல் கலாம் போன்றவர்கள் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிரந்தரமாக திஹார் வாசிகள் அக்கா வேண்டும் ஜெய் பாரத்


Kannan M
மே 10, 2024 23:13

One accuest should not tell this


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை