உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் அப்பீல் மனு : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

கெஜ்ரிவால் அப்பீல் மனு : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின், அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளதால் அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தன் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.இதையடுத்து அவரது கெஜ்ரிவால் வீடு புகுந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரித்து கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளனர். முதன்முறைஇதன் மூலம் ஊழல் வழக்கில் முதன்முறையாக பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் டில்லி ஐகோர்ட் நிராகரித்ததை எதிர்த்தும் தனது கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று கெஜ்ரிவால் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது அவசர வழக்காக எடுத்துக்கொள்ள கோரிக்கைவிடப்பட்டதால், இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
மார் 23, 2024 11:39

அப்போ மீண்டும் முதல்வராவது உறுதி, வந்தே மாதரம்


Palanisamy Sekar
மார் 22, 2024 03:38

தலைமை நீதிபதி முன்னர் விசாரணைக்கு வந்தால்தீர்ப்பு சாதகம்தான்நாடறிந்த விஷயத்தை நாம் வேறு சொல்லனுமா என்ன? குற்றவாளிகளின் புகலிடம் உச்சநீதிமன்றம் என்று சிலர் டீக்கடையில் பேசியதை காதுகொடுத்து கேட்க முடியவில்லை இன்னொருத்தர் சொல்றார்அவரு INDI கூட்டணி தலைவராகவே மாறிட்டாருங்க என்று சொல்வதையும் கேட்கும்போது மனசு சங்கடப்பட்டது உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு புத்திசாலித்தனம் இல்லை என்கிறாரா குற்றவாளி என்று ஒப்புக்கொண்ட ஆளை இவர்கள் தண்டனையை நிறுத்திவைப்பதும், தீர்ப்பை சாவகாசமாக ஒத்திவைப்பதும்என்னங்க இது நம்ம நீதிமன்றம் இப்படி ஆச்சு என்று பேச்சு தொடர்ந்துகொண்டிருந்ததுஅதற்கு மேலே அங்கிருக்க முடியாமல் நகர்ந்து சென்றுவிட்டேன் மக்கள் பேசியவிதம் நம்ம நாட்டுக்கே நல்லதில்லைன்னு எனக்கும் தோன்றுச்சுங்கஉங்களுக்கு?


Palanisamy Sekar
மார் 22, 2024 03:32

கடந்த அறுபதாண்டுகாலங்களில் முதலமைச்சர் ஊழல் செய்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான்ஆனால் தப்பை யார் செய்திருந்தாலும் சட்டத்தின் முன்னர் கொண்டுவந்தே ஆகணும், ஊழல் செய்த யாருமே தப்பிக்க முடியாது பொதுமக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதனை எடுத்து அதனை அம்மாநில மக்களின் நலனுக்காக செலவிடுவோம் என்கிற ஊழலற்ற பிரதமரின் செயலுக்கு முழு வடிவம் கொடுத்துள்ளது அமலாக்கத்துறை இதனை எதிர்ப்போரெல்லாம் நாட்டின் விரோதிகள் என்றுதான் சொல்லணும் கைதுசெய்ததை கண்டிப்போர் ஒன்றும் நீதிபதிகள் அல்ல சட்டத்தின் முன்னர் கொண்டுசெல்ல கைது நடவடிக்கை அவசியம்தான்கோர்ட் முடிவினை சொல்லட்டும் கூட்டணி தலைவர்கள் எல்லாம் நீதிபதிகளாக ஆகிவிட முடியாது கெரிவாலின் அமைச்சர் கடந்த ஒருவருடமாக ஜாமீன் கூட கிடைக்காமல் உள்ளே இருக்கின்றார் என்றால் வழக்கின் தீவிரத்தை அதன் தன்மையை நாம் அறிந்துகொள்ளணும் நாட்டின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள்அப்படிதான் பார்க்கணும் அமலாக்கத்துறை ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் கண்டுகொள்ளாத கெஜ்ரிவாலை கண்டித்திருக்க வேண்டும் நல்லவர்களாக யார் இருந்தாலும் சட்டத்தின் முன்னர் எல்லருமே சமம்தான் முதல்வர் என்றால் கொம்பா முளைச்சிருக்கு என்கிற வசனம் இங்கே வந்துபோகிறது


Palanisamy Sekar
மார் 22, 2024 03:16

uyarneethimanram entha uttharavai pirappitthaalum atharku ucchaneethimanra thalaimai neethipathi avarkal thadaipoduvathaiye valakkamaga kondullaar enave kejrivaaluku thalaimai neethipathi avarkal uthavi seivaar enpathu nichayamthaan senthil paalaajiku kooda thlaimai neethipathiyidam senraal nichyam viduthalai kidaikum nalla neethi, nalla pathikal


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ