உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள்; விசாரணைக்குழு அமைத்தது கேரள அரசு

அடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள்; விசாரணைக்குழு அமைத்தது கேரள அரசு

கொச்சி : கேரளாவில், சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், மேலும் இரு யானைகள் இறந்தது தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க, ஐந்து பேர் அடங்கிய விசாரணைக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக காட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் பூயம்பட்டி வனப் பகுதியில் உள்ள பிண்டிமேடுவில், கடந்த வாரம் 15 - 20 வயதுள்ள மூன்று பெண் யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துவக்கத்தில், 'ஆந்த்ராக்ஸ்' நோய் காரணமாக யானைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டன-. ஆனால், இதை கால்நடை டாக்டர்களும், வனத் துறையினரும் மறுத்தனர். யானைகளின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரானி மற்றும் கொன்னி வனப்பகுதியில், இரண்டு யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன. ரானி குட்ரிக்கல் பகுதியில் இறந்த யானைக்கு ஒரு வயது இருக்கும் என்றும், கொன்னியின் சோம்பலாவில் இறந்தது குட்டி யானை என்றும் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து, யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பது கேரள அரசுக்கும், வனத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தெற்கு வட்ட வனத் துறை தலைமை வனப் பாதுகாவலருக்கு, வனத் துறை அமைச்சர் சுசீந்திரன் உத்தர விட்டுள்ளார்.

இது குறித்து, தலைமை வனவிலங்கு காப்பாளர் பிரமோத் கிருஷ்ணன் கூறியதாவது:

கடந்த 2015 - 2023 வரை, 845 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், சில மனிதர்கள் தாக்கியும், விபத்து ஏற்பட்டும் உயிரிழந்துள்ளன. இதனால், 10 ஆண்டு களில் இறந்த யானைகள் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. வன தலைமையகத்தின் பாதுகாவலர் வினோத்குமார் தலைமையிலான குழுவில், கால்நடை டாக்டர் உட்பட ஐந்து பேர் இருப்பர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு, இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை