மேலும் செய்திகள்
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
6 minutes ago
கைவினை திறன் பயிற்சி முகாம்
11 minutes ago
இன்று மக்கள் நீதிமன்றம்
12 minutes ago
பெங்களூரு: நள்ளிரவு அரசு பஸ் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, காபி, டீ வைத்து குடிக்க 500 மி.லி., கொள்ளளவு உள்ள 'தெர்மோ பிளாஸ்க்' வழங்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் பஸ்களின் பெரும்பாலான விபத்துகள், அதிகாலை 3:00 மணி முதல் 4:00 மணிக்கு உட்பட்ட நேரத்தில் நடக்கிறது. அதிகாலை நேரத்தில் ஓட்டுனர்கள் கண் விழித்து ஓட்டுவது என்பது சிரமம்.விபத்துகளை தவிர்க்கும் வகையில், பயணியர், கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க முன்வந்துள்ளது.இரவு நேரங்களில் பஸ்கள் இயக்கும் போது, ஓட்டுனர்கள் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். பயணத்தின் போது, உணவகங்கள் இல்லாத நேரத்தில், தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள, 500 மி.லி., 'தெர்மல் பிளாஸ்க்' வழங்க முன்வந்துள்ளது. இந்த பிளாஸ்க், 1,600 பஸ் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். காபி, டீ ஆகியவைகளை ஓட்டுனர்களே வாங்கி கொள்ள வேண்டும்.
6 minutes ago
11 minutes ago
12 minutes ago