உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்; இன்று முதல் சிறப்பு பூஜை

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்; இன்று முதல் சிறப்பு பூஜை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: வரும் 22 ம் தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இதற்கென முன்னதாக நடக்கும் சடங்குகள் மற்றும் சிறப்பு பூஜை இன்று முதல் துவங்குகிறது.கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.,21 வரை நடக்கின்றன. இன்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட ஆச்சார்யா பரிகார பூஜை நடத்துகிறார். நாளை (ஜனவரி 17) ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. 18ம் தேதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. 19ம் தேதி மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும். 20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்பதீபம் நடக்கவுள்ளன. 21ம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது.இத்தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramasamy
ஜன 16, 2024 15:39

all can become Archagas in TN . All cannot become leader of DMK. Why the government is mum in doing the same for temples other than Hindu Temple. More over they can give trailing to all citizens of Taml Nadu in the filed of Medicine Scavenging barber Plummer. So that any body can become electrician doctor and so on. One current is giving power to Fan Light AC etc. If all current can be trained to be a fan and light there is no expenses . They can try all


Muthu Kumar
ஜன 16, 2024 15:36

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்


g.s,rajan
ஜன 16, 2024 13:04

இதுதான் வேளை, சரியான வேளை,இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம்.....


Seshan Thirumaliruncholai
ஜன 16, 2024 12:56

ஆகம விதிகளின் பிரகாரம் பூஜை புனுஸ்காரம் ஒரு பகுதியில் நடக்க இன்னொரு பகுதிகளில் ராம நாம பஜனை ராம ராம என்று கோடிக்கணக்கில் எழுதுதல் ராமனை பற்றி பாடல்கள் எல்லா மொழிகளும் பாடவேண்டும். விஷ்ணு பகவான் ஸ்தோத்திர பிரியன் ஆடம்பர பிரியன் என்பதனை மறக்கக்கூடாது.


T.sthivinayagam
ஜன 16, 2024 11:56

அனைவரின் பங்களிப்புடன் உயரும் ராமர் கோவிளில் அர்ச்சகர் ஆக இறை பணி செய்ய அனைவரிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகின்றனர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை