உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நிதீஷ்குமாரை சாடிய ஓவைசி

பீஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நிதீஷ்குமாரை சாடிய ஓவைசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: பீஹாரில் நிதீஷ் குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இது குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பதாவது: விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவது பா.ஜ., அரசின் தோல்வியை காட்டுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும். விவசாயிகள் போராட வரும் போது, அண்டை நாட்டில் இருந்து ராணுவம் வருவது போல் தடுக்கிறார்கள். தேர்தல் நெருங்குகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.பீஹாரில் இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். நிதீஷ் குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுகிறது. துரதிர்ஷ்டவசமாக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
பிப் 14, 2024 08:05

பீகாரில் சட்டம் ஒழுங்கு இன்று தான் சரியில்லையா ??? இத்தனை நாட்கள் கான் கிராஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இருந்த போது... சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததா ??? சட்டம் ஒழுங்கு பற்றி யார் தான் பேசுவது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்.... வன்முறையில் ஊறி போன ஒரு ஈனப்பிறவி நீ பேசுற ???


Ramesh Sargam
பிப் 14, 2024 00:02

அப்ப நீ ஒன்னு செய், சட்டம், ஒழுங்கு 'சிறப்பாக' இருக்கும் பாக்கிஸ்தான் சென்றுவிடு. எதுக்கு சரியில்லை என்று கூறிக்கொன்டு இங்கேயே இருக்கிறாய்?


தாமரை மலர்கிறது
பிப் 13, 2024 21:11

இஸ்லாமிய மக்களுக்காக போராடும் ஒவேஷி தமிழகத்திலும் ஆழ கால்பதிக்க வேண்டும். ஸ்டாலின் இஸ்லாமிய மக்களின் நலன்களை புறக்கணிக்கிறார்.


duruvasar
பிப் 13, 2024 18:34

"விவசாயிகள் போராட்டம்" , கமான் பாயிஸ், பினராயி, ஸ்டாலின், சித்தாராமைய்யா, சீத்தாராம் யெச்சூரி, டேனியல் ராஜா. இவர்கள் முடித்தபின் தான் திருமாவளவன், பிக்பாஸ் கமல் இறுதியாக பாலிவுட் நடிகர்கள் அதை தொடர்ந்து, புரட்சி தமிழன், சூர்யா, கார்த்திக், பிரகாஷ் ராஜ், இப்படி தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் வரை இந்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். வரிசையில் வருவது முக்கியம். பிறகு அரசு விருதுகளை திருப்பி அளிக்கும் நிகழ்வுகள், இந்தியாவிலுள்ள 250 மிக பிரபல புள்ளிகள் பிரதம மந்திரிக்கு எழுத போகும் கடிதம். பி ரெடி.


A1Suresh
பிப் 13, 2024 17:10

முப்பது நிமிடங்கள் போலீஸ் கண்மூடியிருந்தால் இந்தியாவின் அனைத்து ஹிந்துக்களையும் வெட்டிக் கொல்வோம் என்று பிதற்றிய இவரா சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது ?


jayvee
பிப் 13, 2024 16:41

இரண்டுமாதமாக பப்பிள்கம் மெண்றுவிட்டு இப்போது வை திறப்பதேன்.. லாலுவின் மகன் ஆட்சியில் இல்லை. அதனால்தான்


sureshpramanathan
பிப் 13, 2024 16:30

should be driven back to Hyderabad and kept in house arrest Inciting violence is way of doing politics Useless fellow Good educated behaviour NIA and ED should check his money transactions something fishy


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை