உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புதுடில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்த முறைகேட்டில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக கடந்த 2022ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் கவிதா ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் மதுபான கொள்கை விவகாரத்தில் நடந்துள்ள பண மோசடி குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்தாண்டு மார்ச்சில் கவிதாவிற்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி கவிதாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பி வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 17, 2024 09:06

முடிவில் எல்லாம் புஸ் என்று ஆகிவிடும்.


NAGARAJAN
ஜன 17, 2024 07:30

எவ்வளவு பெரிய அயோக்கியத்தனங்கள் செய்திருந்தாலும் புனிதர்கள் ஆகி விடுகிறார்கள். .


sankaranarayanan
ஜன 16, 2024 00:58

இரண்டு தெலங்கு கட்சிகளும் மாண்டன. ஒன்று தெலுங்கு தேசிய கட்சி மற்றொன்று ராஷ்ட்ரிய சந்திர சேகர் கட்சி இப்படியே தமிழகத்திலும் விரைவிலேயே இரண்டு திராவிட கட்சிகளும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்


Easwar Kamal
ஜன 15, 2024 21:28

விடாது கருப்பு. அப்பவே பேசாமல் பிஜேபிஉடன் கூட்டணி வைத்து இருந்தால் இப்போ நீங்கள் ரொம்ப நல்லவங்க லிஸ்டில் இருந்தீர்ப்பார். இப்போ உங்க கட்சியை காவு வாங்காமல் விடமாட்டார்கள்.


Bye Pass
ஜன 16, 2024 06:33

நீங்க ட்ரம்புக்காக பாடு படுங்கள் ...ரொம்பவே சிக்கலில் இருக்கிறார் ...அமலாக்க துறையே தேவலாம் போல தோணும்


Sridhar
ஜன 16, 2024 13:19

உங்களைப்போன்ற சிலருக்கு மக்கள் பணம் இவ்வாறு அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறதே என்ற கவலை சிறிதளவும் இல்லை. மாறாக இந்த கட்சியில் இருந்ததால் தண்டிக்கப்படுகிறார், அந்த கட்சியில் சேர்ந்தால் தப்பித்திருப்பாரென்று தான் சிந்தனை ஓடுகிறது. ED இந்த கேஸை எடுத்து இரண்டு வருசத்துக்கு மேலே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேளுங்கள் அது நியாயம். முன்பே சம்மன் அனுப்பியதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில் மீண்டும் எதற்கு ஒரு சம்மன் என்று கேளுங்கள் அது தர்மம். 100 குற்றவாளிகள் இருந்தாலும் அதில் 2 பேர் பிடிபட்டாலும் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன, மக்களுக்கு நன்மைதானே? ஏன் இவ்வாறு உங்கள் சிந்தனை செல்லமாட்டேன்குது?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி