உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு

மதுபான கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிற்கு ஜாமின் வழங்க டில்லி கோர்ட் மறுத்தது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இதில் தொடர்புடையதாக தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய தெலுங்கான கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்த இருவழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. கவிதா திகார் சிறையில் உள்ளார்.டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஜாமின் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவாஜா, ஜாமின் வழங்க மறுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
மே 07, 2024 07:06

அமலாக்கத்துறை சிறிது காலம் சென்று இவர்களை பிடித்திருந்தால் அனைத்து திருடர்களையும் ஒரே அமுக்காக அமுக்கியிருக்கலாம் என்ன செய்வது கேஜ்ரிவாள் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் உடனே பிடிக்கவேண்டியதாகிவிட்டது ஆக திராவிடர்கள் தப்பித்ததுதான் சோகம்


J.V. Iyer
மே 07, 2024 03:57

இப்படி தமிழகத்திலும் ஒரு G ஊழல் பேர்வழி உள்ளதே? அதற்கு திகார் சிறை எப்போது அடைக்கலம் கொடுக்குமோ தெரியவில்லையே?


தாமரை மலர்கிறது
மே 07, 2024 01:00

ஊழல் செய்தால், முதல்வரின் மகளாக இருந்தாலும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று நிரூபிக்கப்படுகிறது மோடியின் நேர்மைக்கும் நாணயத்திற்குமான நியாயமான ஆட்சியில் மட்டும் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை