உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா ஜாமின் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மணீஷ் சிசோடியா ஜாமின் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமி்ன் மனுவுக்க பதில் அளிக்கும்படி சிபிஐ,அமலாக்கத்துறைக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப் 26-ம்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியா டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரி டில்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா கடந்த ஏப். 30ல் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வரும் 8-ம் தேதி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balasubramanian Sundaram
மே 04, 2024 19:15

ஒருவன் தப்பு செய்கிறான் அவன் சாதாரணமானவன் என்றால் லத்தியால் அடி உதை சாதாரணம் அரசியல்வாதி என்றால் செகுசு அறை நல்ல உணவு வக்கில்கள் துணை என்று இது ஒழிகிறதோ அப்பொழுது தான் நல்ல காலம்


Prem Anand
மே 04, 2024 16:48

ஒன்லி days


venkatakrishna
மே 04, 2024 10:54

அமலாக்கத்துறைக்கு குறைந்தது ஒரு லிருந்து நாட்கள் வரை அவகாசம் கொடுத்தால்தான் அவர்களால் முழுமையான ரிபோர்ட் தரமுடியும் சிசோடியாவெல்லாம் கலைஞரைப்போல் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர் இந்த ஊழலை கண்டுபிடிக்க அதிகமான புத்தி கூர்மை வேண்டும்


swega
மே 04, 2024 07:29

இவர் நமது உச்சநீதிமன்றத்தை நாடினால் அவர்களே பெயில் கொடுத்து கவர்னரை மிரட்டியாவது அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பார்கள்


venkatakrishna
மே 04, 2024 10:56

காட்டவேண்டியதை பொன்முடிபோல் காட்டினால் நிங்கள் சொல்வது நடக்கும்


Kasimani Baskaran
மே 04, 2024 07:02

மதுபான உற்பத்தித்தொகையை விட பல மடங்கு லாபம் இருப்பதால் மது பான உற்பத்தியாளர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கமிசன் கொடுக்கத்தயார் அதை அரசாங்கத்துக்கு வெறும் சொற்பத்தொகை மட்டும் வருமளவுக்கு அரசின் கொள்கைகளை வகுத்து அதை வைத்து காசடித்தவர்கள் ஆத்திமிகள் அதுவும் நூற்றுக்கணக்கில் ஐ போன்களை ஒவ்வொரு போனும் ஒரு லட்சத்துக்கு மேல் வாங்கி அதில் அனுப்பும் தகவல்களை ஒருவரும் தெரிந்து கொள்ளாத வகையில் போன்களை எரித்து தகவல்களை பாதுகாத்து இருக்கிறது இந்த கும்பல் இவன்களை பிடித்து தகவல்களை கறப்பதை விட்டுவிட்டு மதுபான சப்ளையர்களை நொங்கெடுத்தால் அனைத்துத்தகவல்களும் தானே வரும்


தாமரை மலர்கிறது
மே 04, 2024 01:37

தேர்தல் முடியும்வரை ஜாமீன் கிடைக்கவாய்ப்பில்லை இவரை வெளியேவிட்டால், உத்தமபுத்திரன் போன்று வேஷம் காட்டி ஒட்டு கேட்பார்


Syed ghouse basha
மே 04, 2024 01:04

மாவீரன் மனீஷ் சிசோடியா வாழ்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை