உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் 21-ம் தேதி வரை நீட்டிப்பு

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் 21-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் 21-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்த முறைகேடு தொடர்பாக டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கடந்த 2023 பிப்வரியில் கைது செய்தது. திகார் சிறையில் உள்ளார்.இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 9 ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவலில் உள்ளார்.மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Azar Mufeen
மே 09, 2024 12:45

முதல்வர் துணைமுதல்வர் இப்படி எல்லோரையும் பொய்வழக்கில் சிறையில் அடைத்தாலும் இந்த கட்சியில் இருந்து துரும்பை கூட அசைக்க முடியவில்லையே என்ன இது பிஜேபிக்கு வந்த சோதனை


Kasimani Baskaran
மே 09, 2024 06:44

நவீன யுகத்தில் ஒருவனின் நடவடிக்கைகளை மிக எளிதாக அரசாங்கத்தால் அறிந்து கொள்ள முடியும் அப்படியும் கூட தற்குறிகள் போல கள்ளத்தனம் செய்தாலும் லாவகமாக தப்பி விடலாம் என்பது அறிவீனம்


J.V. Iyer
மே 09, 2024 03:58

INDI கும்பல்கள் பலேகில்லாடிகள் எங்கே, எப்படி, எவ்வளவு, யாருக்குக் கொடுத்து தப்பிப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை


R Kay
மே 09, 2024 01:19

இவர் தற்போது இருக்குமிடத்தில் அங்கேயே இருக்கட்டும் ஓசிக்காக இலவசங்களுக்காக இவர்களுக்கு வோட்டு போடும் டில்லி வாசிகள் தாங்கள் வேறு வழிகளில் கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பது கூட தெரியாமல் ஊழலை ஊக்குவிக்கிறார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை