உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதி திட்டங்கள் தொடரும் அமைச்சர் முனியப்பா உறுதி

வாக்குறுதி திட்டங்கள் தொடரும் அமைச்சர் முனியப்பா உறுதி

தேவனஹள்ளி: ''காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியின்படி, மாநிலத்தில் வாக்குறுதித் திட்டங்கள் நீடிக்கும்,'' என, உணவு, பொது வினியோகத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:சொன்னபடி நடக்கும் அரசு, எங்களுடையது. வாக்குறுதி அளித்தபடியே ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தப்பட்டது. மாநிலத்தின் வளர்ச்சியே எங்கள் அரசின் குறிக்கோள். மாநில மக்கள் அரசின் சலுகைகளை பெறுகின்றனர்.எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். காங்கிரஸ் அரசின் மீது, மக்களின் நம்பிக்கை நிலைக்க வேண்டும். அனைவருக்கும் சம பங்கு, சமவாழ்வு என்ற அரசியலமைப்பின் குறிக்கோளின்படி, என் 40 ஆண்டு அரசியல் அனுபவத்தை, இந்த தொகுதி வளர்ச்சிக்காக சேவை செய்வேன்.சுதந்திரத்துக்கு பின், எப்போதும் காணாத வளர்ச்சிகள், தற்போது துவங்கியுள்ளது. தொண்டர்களும், மக்களும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இலவச அரிசி திட்டம், இவர் துறையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி