உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு முழுக்கு போட முத்தஹனுமேகவுடா விருப்பம்

பா.ஜ.,வுக்கு முழுக்கு போட முத்தஹனுமேகவுடா விருப்பம்

துமகூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் எம்.பி., முத்த ஹனுமேகவுடா, காங்கிரசுக்கு தாவ தயாராகிறார். இது பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.துமகூரின், முன்னாள் எம்.பி.,யான முத்த ஹனுமேகவுடா, இதற்கு முன்பு காங்கிரசில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தார். முந்தைய லோக்சபா தேர்தலில், துமகூரு லோக்சபா தேர்தலில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் பசவராஜுக்கு பா.ஜ., சீட் கிடைத்தது.இம்முறை லோக்சபா தேர்தலில், ம.ஜ.த.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதால், துமகூரு தொகுதி ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர வாய்ப்புள்ளது. தனக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்பது தெரிந்ததால், காங்கிரசுக்கு திரும்ப விரும்புகிறார். ஏற்கனவே முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பொங்கல் பண்டிகை முடிந்த பின், முத்தஹனுமே கவுடா, காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளார். இவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள, துமகூரு மாவட்ட தலைவர்கள் சம்மதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ