மேலும் செய்திகள்
ரூ.2,000 கோடிக்கு இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தம்
37 minutes ago
மாணவர் மாயம்
1 hour(s) ago
பணவீக்கத்தை குறைப்பதாக 2014ல் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். இன்றைய சூழலில் சாமானிய மக்களின் தட்டில் உணவு குறைந்து, பைகளில் பணம் இல்லாமல், அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் சவாலாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க சுமையால் மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.- மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்
கேரளாவில் கடந்த ஆறு மாதங்களில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, 15,627 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளது. ஜனநாயக சுதந்திரம் குறித்து பாடம் எடுக்கும் அக்கட்சி, அதிகாரத்தில் உள்ள போது அதை ஒடுக்குகிறது. இதன் வாயிலாக, காங்கிரசின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.- பினராயி விஜயன்கேரள சட்டசபை எதிர்க்கட்சிதலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
அடுத்தாண்டு நடக்கும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 320க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும். வளர்ச்சியை விரும்பாதவர்கள், ஒவ்வொரு முன்னெடுப்பிலும் எதிர்மறையான விஷயங்களை காண்பவர்கள், குழப்பமான சூழலை விரும்புபவர்கள் ஏமாற்றமடைவது நிச்சயம்.- யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர், பா.ஜ.,
37 minutes ago
1 hour(s) ago