உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை: மும்பையில் பயங்கரம்

நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை: மும்பையில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடையில் ஏலக்காய் திருடியதாக சொல்லி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததுடன் நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடையை தயாலாஜிபாய் பானுஷாலி என்பவர் நடத்தி வருகிறார். கடையில் இருந்து ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் மாயமானதாக கூறப்படுகிறது. தயால்ஜிபாய் பானுஷாலிக்கு கடையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததுடன் நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
மார் 29, 2024 20:41

நக்க சொன்னவன் நாக்கை ஆசிட்டை ஊற்றி பொசுக்கி விடவேண்டும்


Prasanna Krishnan R
மார் 29, 2024 15:18

Police kaara. pottu thalluvaen.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை