உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 1ம் தேதி வருது டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்

ஜூன் 1ம் தேதி வருது டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் புதிய மாற்றம்

புதுடில்லி: லைசென்ஸ் வாங்க இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் போக வேண்டியது இல்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த முறை செயல்பாட்டுக்கு வரும். அப்போது இந்த முறையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

கற்றல் உரிமம் (LLR) ரூ.200, கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) ரூ.200, சர்வதேச உரிமம் ரூ.1000, நிரந்தர உரிமம் ரூ.200 லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

டிரைவிங் ஸ்கூலுக்கு என்ன தகுதி?

தனியார் பயிற்சி மையங்கள் ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்க தகுதி பெறவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனத்திற்கு லைசென்ஸ் கொடுக்க அனுமதி வேண்டும் என்றால் மேலும் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
மே 22, 2024 22:27

கட்சிகாரன் பேட்டைக்கொரு டிரைவிங் ஸ்கூல் திறந்து வசூலை குவிப்பான் விபத்துக்ககள் மேலும் அதிகரிக்கும்


Abdul Rahman
மே 22, 2024 21:55

முழுமையான உத்தரவை வெளியிடவும் இது போல அரைகுறை செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது


Varadarajan Nagarajan
மே 22, 2024 20:19

தற்பொழுதுள்ள முறையிலும் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு சென்றால் உரிமம் சுலபமாக கிடைக்கின்றது புதியமுறையில் உரிமத்தை போக்குவரத்து அலுவலகத்திலிருந்து வாங்கி கொடுப்பதற்கு பதில் அவர்களே கொடுக்கப் போகின்றார்கள் இதில் எந்த விதத்தில் சாலை விபத்துக்கள் குறையப்போகின்றது?


M Selvaraaj Prabu
மே 22, 2024 20:08

கட்டுப்பாடுகளில் எப்படி டிரைவிங் சொல்லி கொடுக்க வேண்டும் என்று இல்லையா?


rajasekar v
மே 22, 2024 16:18

Rules and regulations, eligibilty for giving licence, proof are to be clearly explained to the public by the driving school


rajasekar v
மே 22, 2024 16:15

இதை மானிட்டர் செய்வது யாரு ? கிடேலின்ஸ், ரூல்ஸ் கட்டுப்பாடுகள் போன்ற விளக்கங்களை தேவை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை