உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பசு பாதுகாப்பு குற்றங்கள் : மழைக்கால கூட்டத்தொடரில் இன்று புயல்வீசும்

பசு பாதுகாப்பு குற்றங்கள் : மழைக்கால கூட்டத்தொடரில் இன்று புயல்வீசும்

புதுடில்லி : பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான விவகாரத்தை பார்லி.,யின் இன்றை கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பார்லி.,யின் இரு அவைகளிலும் இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற உள்ளது.இதற்கிடையில் பார்லி., நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்க காலை 9.30 மணிக்கு பா.ஜ.,வின் பார்லி., குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பார்லி., குழு கூட்டமும் காலை 10.15 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கவும், பார்லி.,யில் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை