உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதீஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை: தேர்தல் நேரத்தில் பீஹாரில் பதற்றம்

நிதீஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை: தேர்தல் நேரத்தில் பீஹாரில் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் குமார் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டு கொலை செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பீஹாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவராக இருப்பவர் சவுரவ் குமார். பாட்னாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவரது நண்பருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சவுரவ் குமார் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், ஐக்கிய ஜனதா கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MADHAVAN
ஏப் 25, 2024 12:57

தமிழகத்தில் மக்கள் பாதுகாப்போடுதான் உள்ளனர், இங்கு நடக்கும் ஒருசில தவறுகளை நீங்கள் பெரிதுபடுத்தி, தமிழகம் மிக மோசம்னு இந்தியா முழுசும் உங்க கூட்டம் பொய் செய்தி வெளியிடுது, உங்க உத்திரப்பிரதேசத்துல, பீஹார் ல குஜராத்துல நடக்கும் அட்டூழியங்களை வெளிய சொன்னா உங்க வீட்டுல கூட உங்களுக்கு மரியாதையை இருக்காது


தஞ்சை மன்னர்
ஏப் 25, 2024 12:00

இரண்டுமே தொகுதிகள் தான் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அதே தொகுதிக்கு கட்டமாக இங்கே தமிழகத்தை குறை கூறி கொண்டு இருக்கும் தர்குறிகள் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்


ஆரூர் ரங்
ஏப் 25, 2024 13:40

இதே நிதீஷ்குமாருடன் INDI கூட்டணியிலுள்ள லாலு காங்கிரசும் சேர்ந்திருந்த போது பிஹார் அமைதிப் பூங்காவாக இருந்ததா?


Ashanmugam
ஏப் 25, 2024 11:50

பாழாப்போன பதவி வெறிக்கு கொலை வெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்க தக்கது இந்தியாவில் வர வர வெளிநாடு போல துப்பாக்கி சுடும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது ஒன்னுதுக்கும் உதவாத சட்டங்களை வலுக்கட்டாயமாக பிரேரபணை செய்யும் மோடிஜி அரசு ஏன் தூக்கு தண்டனை சட்டத்தை அமல்படுத்த முன் வரவில்லை


தஞ்சை மன்னர்
ஏப் 25, 2024 11:34

இரண்டுமே தொகுதிகள் தான் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அதே தொகுதிக்கு கட்டமாக இங்கே தமிழகத்தை குறை கூறி கொண்டு இருக்கும் தர்குறிகள் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி