உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை

வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ இடைக்கால பட்ஜெட் என்பதால், வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அவர் கூறியதாவது: *வருமான வரி ரிட்டன்ஸ் முன்பு 90 நாட்கள் ஆகும்; ஆனால் தற்போது 10 நாட்களில் வழங்கப்படுகிறது.*கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*இறக்குமதி வரி விகிதங்களிலும் மாற்றமில்லை*நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.*இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி உச்சவரம்பிலும் மாற்றமில்லை*புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது.*வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது*அரசின் நேரடி வரி வசூல் 3 மடங்கு அதிகரித்து உள்ளது. *10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.*வருமான வரி செலுத்தும் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது.*வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.* ரூ.25 ஆயிரம் வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் கைவிடப்படும்.* பழைய வழக்குகள் கைவிடப்படுவதால் வருமான வரி செலுத்தும் ஒரு கோடி பேருக்கு பலன் கிடைக்கும்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ராஜா
பிப் 02, 2024 05:23

இதன்மூலம் தேர்தலை நோக்காமல் வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் என்று புரிகிறது. ஆனால், கட்டும் வருமான வரியின் பலன் ஓட்டுக்கும், ஓசிக்கும் போகாமல் அதை கொடுத்த மக்களின் வாழ்கையில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். தரமான இலவச கல்வி, மருத்துவம், கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தால் வரி கட்டுபவர்கள் அல்லாது கட்ட முடியாத வருமானத்தில் இருக்கும் ஏழைகள் கூட பலன் பெறுவார்கள்.


rsudarsan lic
பிப் 01, 2024 21:31

எந்த திட்டங்களும் அறிவிக்காத போது நிதி பற்றாக்குறை குறையத்தானே செய்யும்? தவிர, திட்டங்களே இல்லாத பட்ஜெட்டில் 5.5 சதவீத பற்றாக்குறையா ? எப்படி ?


g.s,rajan
பிப் 01, 2024 21:25

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூப்பரா அல்வாவைக் கிண்டி சிம்பாலிக்கா அப்பவே சொல்லிட்டாங்களே.... .


g.s,rajan
பிப் 01, 2024 21:22

இந்தியாவில் வருமான வரி கட்டுறவங்களுக்கு வழக்கம் போல் திகட்டத் திகட்ட அல்வா கொடுத்துட்டாங்க.....


rsudarsan lic
பிப் 01, 2024 21:18

இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா


rsudarsan lic
பிப் 01, 2024 21:15

பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை அது இடைக்கால பட்ஜெட் என்று எவரும் எழுதவில்லை


Santhakumar Srinivasalu
பிப் 01, 2024 13:26

அப்போ நடுத்தர மக்களின் வருமானத்திற்கு எப்போ நிவாரணம் கிடைக்கும் மேடம் நிர்மலா அவர்களே?


Narayanan Muthu
பிப் 01, 2024 17:56

நடுத்தர மக்களுக்கோ பாமர மக்களுக்கோ ஆன அரசு அல்ல.


ஆரூர் ரங்
பிப் 01, 2024 12:22

இடைக்கால பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகளை எதிர்பார்க்கக்கூடாது. தேர்தலுக்குப் பிந்தைய முழு பட்ஜெட்டில் மட்டுமே அரசின் நிதிக் கொள்கை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். ????ஆண்டு FISCAL நிதிப்பற்றாக்குறை அளவு பெருமளவு ( 5.8 லிருந்து 5.1 ஆக) குறைக்கப்பட்டு வருவதே மகிழ்ச்சிகரமான செய்தி.


தமிழ்வேள்
பிப் 01, 2024 12:47

திருட்டு திராவிடத்துக்கு இதெல்லாம் மண்டையில் ஏறாது ..வழக்கம்போல திட்டி தீர்ப்பார்கள் .


R MANIVANNAN
பிப் 01, 2024 13:40

நீங்களும் வழக்கம் போல் முட்டு கொடுங்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ