| ADDED : ஜன 11, 2024 11:39 PM
சித்ரதுர்கா: கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவிக்கு, தன் பெயரை பரிசீலிக்க வேண்டாம் என, செல்லகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரகுமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.முதல்வருக்கு அவர் எழுதிய கடிதம்:கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணைத் தலைவர் நியமன செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. வாரிய தலைவர் பதவிக்கு, என் பெயரை பரிசீலிக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறேன். கட்சி மேலிடத்துக்கு தர்மசங்கம் ஏற்படாமல் நடந்து கொள்ள விரும்புகிறேன்.செல்லகெரே தொகுதியில் போட்டியிட, கட்சி எனக்கு வாய்ப்பளித்தது. 20213, 2018 மற்றும் 2023ல் வாக்காளர்கள் எனக்கு ஆதரவு அளித்தனர். இந்த வாய்ப்புக்காக கட்சிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தொகுதி வளர்ச்சிக்கு, அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.