உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் மறுதேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுடில்லி: ''நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது'' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=miqd2fng&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மறு தேர்வு

விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ''சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நீட் தேர்வில் குளறுபடி புகார் எழுந்துள்ளதால், கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும் முடியாது; அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வை எழுத வேண்டும் என உத்தரவிடவும் முடியாது'' என்றார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ''ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்'' என்றார். அப்போது குறுக்கிட்ட சந்திரசூட், ''வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்'' எனக் கூறினார்.

தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட்

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) மதியத்திற்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட்டால் தான் நடந்ததை அறிய முடியும்' எனக் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தனர்.

சென்னை ஐஐடி அறிக்கை

சென்னை ஐஐடி இயக்குனர் தேசிய தேர்வுகள் முகமையின் ஆட்சி மன்ற உறுப்பினராக இருப்பதால், விசாரணை அறிக்கையில் அவரது பங்களிப்பு சந்தேகத்திற்குகுரியது எனவும், சென்னை ஐஐடி வழங்கி உள்ள விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வை சென்னை ஐஐடி நடத்துவதால் அதன் தலைவர் தேசிய தேர்வுகள் முகமையின் குழுவில் இடம் பெற்று இருப்பார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயார் செய்த இயக்குனர் குழுவில் இடம் பெறவில்லை'' என விளக்கமளித்தார். நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சென்னை ஐஐடி விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

kannan R
ஜூலை 18, 2024 18:17

நீட் வினாத்தாள் கசிவு என்பது உண்மைதானே உண்மையானால் நீட் தேர்வை மீண்டும் நடத்துவதுதான் நியாயமாக கருதமுடியும்.


SP
ஜூலை 18, 2024 16:43

நீட்டை வைத்து அரசியல் செய்வதற்கு முதலில் தடைபோடுங்கள்


konanki
ஜூலை 18, 2024 15:39

ஹிந்தி எதிர்ப்பு/திணிப்பு என்று 60 வருடம் வெட்டியா அரசியல் செய்யும் கட்சிகள் நீட் எதிர்ப்பு/திணிப்பு என்று 60 வருடம் வெட்டியா அரசியல் செய்யும்.ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும் 100 வருஷம் ஆனாலும் நீட் கண்டிப்பாக நடக்கும். ஓழிக்கவே முடியாது


konanki
ஜூலை 18, 2024 15:28

தனியார் மருத்துவ கல்லூரி முதலாளி பண முதலைகளிடம் கோடி களில் பணம் வாங்கி நீட் எதிர்ப்பு அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் ?


konanki
ஜூலை 18, 2024 15:26

ஸ்டாலின்/உதயநிதி ஸ்டாலின் யார் தமிழகத்தில் ஆட்சி புரிந்தாலும் நீட்டை ஒழிக்க முடியாது.


Suppan
ஜூலை 18, 2024 16:24

1962 வரை "அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு" என்று பம்மாத்து காட்டினார்கள். நேரு பிரிவினை வாதத் தடைச்சட்டம் கொண்டுவந்தவுடன் வாயை மூடிக்கொண்டார்கள், திராவிடநாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பினார்கள்.. அடுத்த பிரச்சினை வரும்வரை நீட்டைக் கட்டிக்கொண்டு அழுவார்கள். கதறட்டும் .


Vijayakumar Srinivasan
ஜூலை 19, 2024 00:03

உண்மை தான் சார்


Vijayakumar Srinivasan
ஜூலை 19, 2024 00:03

உண்மை தான் சார்


konanki
ஜூலை 18, 2024 15:24

நீட்டை ஒழிப்போம் என்று பொய் பித்தலாட்டம் செய்யும் நாசகார கும்பலுக்கு சரியான சம்மட்டி அடி


konanki
ஜூலை 18, 2024 15:19

தமிழகத்தில் 1967 ல் இறந்த உண்மை நன்மை நேர்மை தூய்மை மறுபடியும் உயிர்ப்பிக்கும் நாள் தான் தமிழகத்திற்கு நன்னாள்


Mario
ஜூலை 18, 2024 14:00

மோடியின் பொற்கால ஆட்சியின் கொடுமை


Narayanan Muthu
ஜூலை 18, 2024 13:25

மோசடி செய்பவர்களின் பலமே இதுதான். ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் இவர்களின் தைரியம். நேர்மை இறந்து பத்து வருடம் முடிந்து பதினோராவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 14:35

சாராயத்தை குடித்துவிட்டு ஏராளமான மக்கள் இறக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் கடைகளை மூடி விடவில்லையே. வாக்குறுதி என்னாச்சி?


konanki
ஜூலை 18, 2024 15:35

அதனால் தான் 2 ஜி ஊழலில் ஜெயிலுக்கு போகவில்லையா? அப்பநீதி இறந்து 14 ஆண்டுகள் ஆகிறது 11 ஆண்டுகள் இல்லை


M.COM.N.K.K.
ஜூலை 18, 2024 12:57

நீட் வினாத்தாள் கசிவு என்பது உண்மைதானே உண்மையானால் நீட் தேர்வை மீண்டும் நடத்துவதுதான் நியாயமாக கருதமுடியும்.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 13:45

வாக்குக்கு பணம் உண்மைதானே? குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் முதல் கையெழுத்து வாக்குறுதிகள் ஏமாற்று வேலைதானே?அப்போ ஆட்சியைக் கலைக்கலாமா ?.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை