மேலும் செய்திகள்
லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்
2 hour(s) ago | 6
2வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்கு
2 hour(s) ago | 2
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760!
9 hour(s) ago | 2
கட்ச்: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் இந்திய எல்லையில் நுழைந்தபோது இருவரையும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர்.பாகிஸ்தானை சேர்ந்த போபட் 24, அவருடன் பெண் தோழி கவுரி 20, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கால்நடையாக இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று (நவம்பர் 24)நுழைந்தனர். அப்போது இருவரும் பிஎஸ்எப் எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கைதான இருவரும், தங்கள் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள எங்களது கிராமத்தில் இருந்து கடந்த நவம்பர் 23 ஆம் தேதி வெளியேறியதாக கூறினர். அவர்கள் இருவரும் கட்ச் பகுதியில் உள்ள நிலப்பரப்பு வழியாக சர்வதேச எல்லையை தாண்டி வந்தனர். எல்லை தாண்டி வந்ததன் காரணமாக, இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் அடையான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.கைதான இருவரும் மீது விரிவான விசாரணை நடந்து வருகிறது.கடந்த இரு மாதங்களில் இது இரண்டாவது கைது நடவடிக்கை ஆகும்.இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
2 hour(s) ago | 6
2 hour(s) ago | 2
9 hour(s) ago | 2