உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி நடவடிக்கை

காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=suobiobq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேடப்பட்டு வந்த, காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து, பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ஆதரவளிக்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையை சேர்ந்த 3 பேரை உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ஆவர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே., ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

jayvee
டிச 23, 2024 18:53

அப்படிருக்க ..இங்கோ


பாலா
டிச 23, 2024 17:57

நீங்க ஏண்டா ஊ்.பி போனீங்க, அங்கதா பிஜேபி ஆட்சி அதுவும் யோகி ஆட்சி ஆச்சே!. நீங்க தமிழ் நாட்டுக்கு வந்திருகளாமல...இங்க உங்களை தியாகியா ஆக்கியிருப்பாங்க. போச்சா!!


ஆரூர் ரங்
டிச 23, 2024 14:00

பாஷா மட்டும்தானா?


SUBBU,MADURAI
டிச 23, 2024 17:30

A team of Punjab Police informed the UP Police about the presence of the three terrorists in an area that falls under the jurisdiction of the Puranpur police station of Pilibhit. The police of both states launched a joint operation as they received the tip off about the accused’s presence in Puranpur. The gunfight broke out in the early hours of Monday after which the three accused were gunned down.


Mohammad ali
டிச 23, 2024 13:02

கேள்வி கேட்பவனை அடிக்க வேண்டும்


S Ramkumar
டிச 23, 2024 15:38

பயங்கரவாதிகள் கேள்வி கேட்க தகுதி அற்றவர்கள்.


Bhakt
டிச 23, 2024 19:39

எப்படி? குண்டு வீசி கேள்வி கேட்பீர்களா?


வாய்மையே வெல்லும்
டிச 23, 2024 21:10

பங்கடேஷுக்கு போங்க சுதந்திரமாக கேள்விகேட்கலாம்.. சோறு தண்ணி இல்லாம அழுது சிரிச்சு பஞ்ச பாட்டு இலவசம் .. இங்க இந்தியாவில் உங்களை பாதுகாப்பாக வைத்தால் இதுவும் பேசுவீர்கள் இன்னமும் எதிர்பார்க்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 23, 2024 12:25

மனித உரிமை கமிஷன் என்ற பெயரில் கேள்வி கேட்க ஒரு கூட்டம் இனி வரும்.


MARI KUMAR
டிச 23, 2024 12:14

பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை