உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாவில் இன்று 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கோவாவில் இன்று 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ஜீவோட்டம் மடத்தில் இன்று (நவ.,28) பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நேற்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uasi1d28&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று பிற்பகல், பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஜி. பாய், மடத் துறவி வித்யாதீஷ் தீர்த்த் ஸ்ரீபாத் வேடர் கூறியதாவது: மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்தகாலியில் உள்ள பிரதான மடத்தை மடாதிபதி புதுப்பித்து, சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய மத நூல்களை ஆராய்ச்சி செய்வதற்கான இடத்தை உருவாக்கியுள்ளார். பிரதான மட வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளையும் மடாதிபதி கட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தேச பக்தன்
நவ 27, 2025 18:10

ஜெய் ஸ்ரீ ராம்


Vijay D Ratnam
நவ 27, 2025 17:25

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் இது போன்ற 80 அடி உயர ராமர் வெண்கல சிலை வைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையும் ரயில்பாதையும் க்ராஸ் செய்யும் இடத்தின் அருகாமையில் அமைத்தால் சிறப்பு. பகலில் பிரமாண்டமாக இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் சாலையில் பயணிப்போரும் ரயிலில் பயணிப்போரும் பார்த்து சிலிர்க்கும் வகையில் அமைக்க வேண்டும். சத்குரு பிரம்மா ஆஸ்ரமம் என்ற பெயரில் ஒரு இடம் உள்ளது. அவர்களிடம் பேசி அந்த இடத்தில் அமைக்கலாம். அப்படி அமைத்தால் அற்புதமான வியூவாக இருக்கும். திருச்சியின் புதிய லேண்ட்மார்க்காக இருக்கும்.


Priyan Vadanad
நவ 27, 2025 15:02

நல்லதே நடக்கவேண்டும்.


அசோகன்
நவ 27, 2025 13:32

ஜெய் ஸ்ரீராம்


தமிழன்
நவ 27, 2025 13:21

நடு கடல்ல பேனா சிலை எதுக்கு....


Madras Madra
நவ 27, 2025 12:09

இந்தியா முழுவதும் ராமர் சிலை வைக்க வேண்டும் தர்மம் தழைக்க வேண்டும் தீய சக்திகள் தானாக அழியும்


RAMESH KUMAR R V
நவ 27, 2025 11:35

ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம்.


Venugopal S
நவ 27, 2025 11:25

உருப்படியாக நாட்டுக்கு எதுவும் நல்லது செய்ய மாட்டாரா?


Anand
நவ 27, 2025 11:42

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல, ஹிந்து கோவில் சம்பந்தமான விஷயங்களில் மதமாரிகளுக்கு என்ன வேலை?


V Venkatachalam, Chennai-87
நவ 27, 2025 11:56

உருப்படியாக செய்வது என்பது ஒன்றே ஒன்றுதான்.


Velayutham rajeswaran
நவ 27, 2025 12:10

கோவாவில் இதுவும் உருப்படியான வேலை தான்


நாஞ்சில் நாடோடி
நவ 27, 2025 12:54

திராவிட தீய சக்திகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதும் உருப்படியான வேலை ...


Modisha
நவ 27, 2025 14:22

செய்வார் ,


PR Makudeswaran
நவ 27, 2025 15:20

ஏன் டாஸ்மாக் கண்ணிற்கு தெரியவில்லையா? அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் வழக்கு தெரியவில்லையா? இது எல்லாம் உருப்பட தானே.


sivakumar Thappali Krishnamoorthy
நவ 27, 2025 11:23

வாழ்க பாரதம் .ஸ்ரீ ராமபாத நமஸ்காரம் அநேகம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை