மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தார்.மைசூரு தொகுதி பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு, இம்முறை சீட் கிடைப்பது சந்தேகம். இவரை களமிறக்கக் கூடாது என, தொண்டர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதனால் அவர் கிலியடைந்துள்ளார். எப்படியாவது சீட் பெற முயற்சிக்கிறார்.பெங்களூரின், டாலர்ஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இல்லத்துக்கு, பிரதாப் சிம்ஹா நேற்று காலை சென்றார். லோக்சபா தேர்தல் தொடர்பாக, இருவரும் ஆலோசனை நடத்தினர்.அப்போது தன் தொகுதியில் எம்.பி., தொகுதி நிதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த அறிக்கையை, எடியூரப்பாவிடம் பிரதாப் கொடுத்துள்ளார். அத்துடன் இம்முறை தனக்கு சீட் தரும்படி, அவரிடம் பிரதாப் சிம்ஹா கோரியதாக கூறப்படுகிறது.
1 hour(s) ago