உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிர் தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கு அழைப்பு

உயிர் தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: வரும் 22ம் தேதி, அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழில், கோவிலின் பிரமாண்ட தோற்றம் மற்றும் குழந்தை ராமரின் அழகிய புகைப்படத்துடன், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கையேடு இணைக்கப்பட்டுள்ளது. உயிர் தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கும் அழைப்பதழ் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க, 7,000 பேருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் அழைக்கப்பட உள்ளனர்.இதற்கான அழைப்பிதழ் தயாராகிவிட்டது. அதில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் அடங்கிய பிரதான அழைப்பிதழுடன், குழந்தை ராமர் சிலையை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய அழைப்பிதழும் இடம் பெற்றுள்ளது.இது தவிர கையேடு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன.அழைப்பிதழின் முகப்பு பக்கத்தில், ராமர் கோவிலின் பிரமாண்ட, 'சில்லவுட்' புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன.அதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் பங்கேற்க, ராமாயணம், 'டிவி' தொடரில் ராமர் - சீதையாக நடித்த நடிகர்கள் அருண் கோவில் மற்றும் தீபிகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4,000 துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினரும் விழாவுக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜன 05, 2024 15:39

ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு மவுனமாக இருந்தே ஒத்துழைப்பு கொடுத்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பு அழைப்பளிக்க வேண்டும். அந்த ஒரு புண்ணியமே அவரை அமரருள்???????? உய்க்கும்.


thangam
ஜன 05, 2024 14:40

பிடிக்காதவர்கள் பாக்கிஸ்தான் அல்லது ரஷிய செல்லவும். இது ஹிந்துக்கள் பூமி


Rajamani K
ஜன 05, 2024 12:44

ராமர் கோவில் பற்றி எதிர்மறையாக கருத்துத் தெரிவிக்கும்


அப்புசாமி
ஜன 05, 2024 11:42

தொண்டர்களை இராமர் காப்பத்தலியே கோவாலு?


நாஞ்சில் நாடோடி
ஜன 05, 2024 12:05

டேய் ...


basheer
ஜன 05, 2024 11:19

இவனுவோ உயிர் தியாகம் செய்யல கலவரம்பண்ணி செத்துட்டானுவோ


மல்லையா,கோத்தகிரி
ஜன 05, 2024 12:52

இனிமே நீ நெனக்கிற மாதிரி குண்டு வைக்க முடியாது அந்த மாதிரி நெனப்பு கூட வந்தாலும் பரலோகம் உறுதி


MADHAVAN
ஜன 05, 2024 10:52

ராமர்கோவில் அனைவராலும் ஏற்றுக்கொண்ட ஒன்று, கொண்டாடப்படவேண்டியதும்கூட, இது இந்தியமட்டுமல்லாமல் அனைவரும் பெருமித படவேண்டியது,


Velan Iyengaar
ஜன 05, 2024 08:24

ராமர் சீதையாக நடித்தவர்களுக்கு சிறப்பு அழைப்பு இருக்காம் நன்றி கடன் அப்போ அப்துல் நஷீர் அதாங்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தற்போதைய கெவுனர்.. பெறவு ரஞ்சன் ககோய்....அவருக்கு சிறப்பு அழைப்பு உண்டா இல்லையா?? இவர்களுக்கு மட்டும் தான் அதிகமாக நன்றிக்கடன் பட்டிருக்கு BJ பார்ட்டி நன்றி கடன் காட்ட மாட்டீர்களா??


ஆரூர் ரங்
ஜன 05, 2024 10:48

முன்பு அந்த இடத்தில் ஹிந்து ஆலயம்தான் இருந்தது என நிரூபித்து அறிக்கை கொடுத்த அகழ்வாராய்ச்சி???? நிபுணர் முஹம்மது அவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


Duruvesan
ஜன 05, 2024 11:16

அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க


Kasimani Baskaran
ஜன 05, 2024 05:31

பல்வேறு தரப்புக்கள் ஆதாரங்களை திரட்டித்தந்தன. அந்த அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் கோர்ட் நடவடிக்கையில் பங்கு பெற்ற அனைவரும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக பிரம்மாண்டமான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை