உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ‛இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு: 26 தொகுதிகளில் ஆர்ஜேடி போட்டி

பீஹாரில் ‛இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு: 26 தொகுதிகளில் ஆர்ஜேடி போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில், ‛ இண்டியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம்( ஆர்ஜேடி) 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.லோக்சபாவுக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏப்.,19 துவங்கி ஜூன் 1 வரை நடக்கிறது. பீஹாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு, ‛ இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கியுள்ள ‛மகாட்பந்தன்' என்ற பெயரில் செயல்படுகின்றன. தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக அக்கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. அக்கட்சிகள் இடையே ஏற்பட்டு உள்ள உடன்பாட்டின்படி, அதிகபட்சமாக ஆர்ஜேடி -26 தொகுதிகளிலும், காங்கிரஸ்-09 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை