உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.7,755 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன: ரிசர்வ் வங்கி

ரூ.7,755 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன: ரிசர்வ் வங்கி

மும்பை : உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரூ. 7,755 கோடி பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்தபோது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில் கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மே.02-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இதையடுத்து இன்று (ஜூன்.03) ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்ட நிலையில் இன்னும் ரூ. 7,755 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இதன் மூலம் 97.82 சதவீதம் திரும்ப பெறப்பட்டன. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

james arul rayan
ஜூன் 04, 2024 08:10

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்தால் பல கோடி ரூபாய் திரும்ப வர வாய்ப்புள்ளது.


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 22:25

காங்கிரஸ் ஆட்சி வந்தால் இதை செல்லும் என்று சொல்லி திரும்ப வாங்குவார்கள் என்ற நப்பாசையில் சிலர் அப்படி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.


அப்புசாமி
ஜூன் 03, 2024 20:56

ஆளுக்கு 15 லட்சம் போடற அளவுக்கு ஸ்விங் வங்கிகளில் பணம் பதுங்கியிருக்கு. போய் கொண்டாங்க.


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜூன் 03, 2024 19:56

பொதுமக்களிடம்தான் உள்ளது என்று எப்படி கண்டுபிடித்தார்கள். அரசியல்வாதிகள் அந்த பணத்தை மாற்ற முடியாமல் அதை அழிக்கும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஏன் இப்படி ஸ்டேட்மெண்ட் விட வேண்டும்?


A1Suresh
ஜூன் 03, 2024 19:44

கஜத்ரட்சகன், தொரமருகன், வஞ்சிரவேலு, திருச்சி காந்தி ஆகியோரிடம் மொத்தமாக இருக்கும்


Pandi Muni
ஜூன் 03, 2024 19:29

அவ்வளவும் கருணாநிதி குடும்ப கும்பல் கிட்டதான் இருக்கணும்


முருகன்
ஜூன் 03, 2024 19:49

என்னி பார்த்த மாதிரி பேசுகிறார்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி