மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோயில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோயில். இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது.நடப்பாண்டு உற்ஸவத்துக்கு, நேற்று இரவு, 7:00 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதற்கு, தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு தலைமை வகித்தார்.முன்னதாக, நெம்மாரா சகோதரிகளின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. உற்ஸவத்தை முன்னிட்டு நடக்கும் சங்கீத உற்ஸவம், நாளை, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், டி.வி.கோபாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் உட்பட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு சங்கீத ஆராதனை நடத்துகின்றனர். பிப்.21ல் ஏகாதசி உற்ஸவம் நிறைவடைகிறது.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
6 hour(s) ago