மேலும் செய்திகள்
உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம் பன்னாட்டு நிதியம் பாராட்டு
37 minutes ago
பிர்லா எஸ்டேட்ஸ் ஒரே நாளில் ரூ.1,800 கோடி வீடுகள் விற்பனை
38 minutes ago
ம.பி.,யில் கஞ்சா கடத்திய அமைச்சரின் தம்பி கைது
1 hour(s) ago
புதுடில்லி: நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025 ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் நபர்கள் வரிசை பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான் ஷாருக்கான் இந்தாண்டு நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் கே எழுத்து பதித்த ஆபரணங்களுக்காக 2025 ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் நபர்கள் வரிசையில் இடம் பெறச் செய்துள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், உலகளாவிய விழாவிற்கு ஒரு தனித்துவமான இந்திய நேர்த்தியை ஷாருக்கான் கொண்டு வந்துள்ளார் என பாராட்டு தெரிவித்து இருந்தது. 2025 ம் ஆண்டின் ஸ்டைலிஷ் நபர்கள் தேர்வில் நடிகர் ஷாருக்கான் மட்டுமின்றி சப்ரினா கார்பென்டர், டோச்சி, ஏபி ராக்கி, விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்சிங்கர், வால்டன் கோகின்ஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், ஷாய் கில்ஜியஸ்-அலெக்சாண்டர், கோல் எஸ்கோலா மற்றும் நோவா வைல் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
37 minutes ago
38 minutes ago
1 hour(s) ago