உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் சுமூகமான உறவு: மாலத்தீவு தூதர் இப்ராஹிம் பேட்டி

இந்தியாவுடன் சுமூகமான உறவு: மாலத்தீவு தூதர் இப்ராஹிம் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவுடனான உறவு நன்றாகவும், சுமூகமாகவும் உள்ளது என மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாஹீப் தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதிபர் முய்சு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். எதிர்ப்பு கிளப்பியதால், அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் இந்தியா-மாலத்தீவு இடையேயான தூதரக உறவு பாதிப்படைந்தது.இந்நிலையில், மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாஹீப் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பார்லிமென்ட் வந்தார். அப்போது இந்தியா-மாலத்தீவு உறவு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ இந்தியாவுடனான உறவு நன்றாகவும் சுமூகமாகவும் உள்ளது'' என இப்ராஹிம் ஷாஹீப் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

jayvee
ஜன 31, 2024 18:20

மொய்சு என்ற கொசு ஒழியும் வரை இந்தியா விடாது .. அது டெங்கு மலேரியா காலரா வை விட மோசமானது .. இது எப்படி இருக்கு


Nagarajan D
ஜன 31, 2024 17:53

அப்படி சொல்ல சொல்லி சொன்னாங்க... அவ்வளவு தான்


Yaro Oruvan
ஜன 31, 2024 17:49

எதிரியை ஒத்துக்கொள்ளலாம்.. துரோகியை???


Anand
ஜன 31, 2024 17:46

மொய்சு அரசு கவிழும்வரை இப்படித்தான் கூவவேண்டியிருக்கும்....


HoneyBee
ஜன 31, 2024 17:18

இனிமேல் என்னை சொல்லி என்ன பண்றது. கதை முடிந்தது


A1Suresh
ஜன 31, 2024 17:13

எதிரி சீனாவைக் கூட மன்னிக்கலாம் . மாறாக துரோகி மாலத்தீவினை மன்னிக்கவே கூடாது . லட்சதிவீபத்தை சுற்றுலா உலகின் சுவர்க்கமாக்குவோம் . இனி மாலத்தீவு,....மண்கவ்விய தீவு என்றாகும் .


வெகுளி
ஜன 31, 2024 15:51

என்ன மொய்சு அங்க சத்தம்?.... சும்மா பேசிக்கிட்டிருக்கோம் ஜி.....


N.Purushothaman
ஜன 31, 2024 15:34

சீனாக்காரன் கொடுக்குற காசுக்கு மதி மயங்கினால் நாளைக்கு நாட்டையே ஆட்டைய போட்டுடுவான் ..இதை தற்போது பல நாடுகள் உணரத்தொடங்கி உள்ளன ...


Renukadevi,Srirangam
ஜன 31, 2024 15:23

I literally just got off the phone to my aunt in the UK, who had planned a holiday in Maldives this year, she informed me that she and her family will never go to the Maldives now!


SUBBU,MADURAI
ஜன 31, 2024 15:09

From being the top tourist group visiting Maldives, Indians have slipped to the fifth position in the last three weeks, amid a diplomatic row between New Delhi and Male, according to official data.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை