உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லூர்: நாட்டில் சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் நலனே முக்கியமாக உள்ளது'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள சிலர் பொருத்தமற்ற காரணங்களுக்காக நாட்டு நலனை விட அரசியல் நலனை முன்னிறுத்தி உள்ளனர். அதில் இருந்து மீண்டு புத்திசாலிகளாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக வேண்டி கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தியாகம் செய்தவர்களிடம், அவர்கள் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.நேற்று தேசிய சட்டப்பல்கலை மாணவர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசும் போது, '' நாட்டின் அரசியலமைப்பு பதவியில் உள்ள ஒருவர், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார்'' என ராகுலை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்புசாமி
ஆக 18, 2024 08:40

விரைவில் துணை ஜனாதிபதி பதவியை உதறி விட்டு நாட்டு நலனுக்கு போயிடுவார்.


Lion Drsekar
ஆக 18, 2024 07:49

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து துணை பதவிக்கு வந்துள்ளார் பாராட்டுக்கள், இன்னமும் நான்கு ஆண்டுகள் பிறகு ஓய்வு , பென்சன் , புத்தகம் வெளியிடுவது . இதுதான் காலத்தின் சக்கரம், நாட்டு நலனுக்காக அந்த சிலருக்கு அரசியலில் இப்படித்தான் இருக்கவனேயும் என்று சட்டத்தை முன்வரலாம், மக்கள்தான் வழி தெரியாமல் , செய்வது அறியாமல் , வாக்களித்தால் அளிக்கவில்லை யாராலும் ஏதோ ஒரு குடும்பம் பலனை அடைந்து வருகிறது என்று உயிருக்கு பயந்து ஒடுங்கி வாழும் நிலையில் , மிகுந்த பாதுகாப்புடன் கடைசி மூச்சு இருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கப்போகும் உங்களைப் போன்றவர்கள் துணிந்து நடவடிக்கை எடுத்து நாட்டைக் காப்பாற்றினால் நன்றாக இருக்கும், மக்களோடு சேர்ந்து முகாரி ராகம் பாடுவதில் என்ன லாபம் . வந்தே மாதரம்


அரசு
ஆக 17, 2024 23:12

இவருக்கு நாட்டு நலனை விட, பாரதீய ஜனதா கட்சியின் நலனும், மோடி, அமித்ஷா அவர்களின் நலனும் தான் முக்கியம்.


Dharmavaan
ஆக 17, 2024 21:41

அப்படியென்றால் ஒட்டு போடும் மூடர் கூட்டம் தேசத்துரோகிகள்


J.Isaac
ஆக 18, 2024 18:29

ஓட்டு போட்டால் நீங்களும் மூடர் தானே. ஓட்டு போடவில்லை என்றால் பச்சோந்தி


Thirumal s S
ஆக 17, 2024 20:44

இவர் சொல்வது இவருக்கும் பொருந்தும்


Narayanan Muthu
ஆக 17, 2024 20:41

இவர் கூறும் நாட்டு நலன் அதானியின் நலம் என தெளிவாக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை நாட்டு மக்களுக்கு செய்தது ஸிரோ. அதானி அம்பானி போன்ற கார்பர்டேகளுக்கு செய்தது கணக்கில்லாதது. போதும் உங்களின் நாட்டுநலன் புராணம்


ஆரூர் ரங்
ஆக 17, 2024 22:13

அப்போ மாறன்கள் நடத்துவது கார்ப்பரேட் கம்பெனிகள்தானே? அவங்களோட கேபிள் தொழிலுக்கு உதவத்தானே அரசு கேபிள் கழகத்தை அடக்கம் செய்தார் கருணாநிதி?


Ramesh Sargam
ஆக 17, 2024 20:09

பலருக்கு...


nagendhiran
ஆக 17, 2024 18:58

பப்பு ராகுல் என்று தெளிவா சொல்லுங்க?


sundarsvpr
ஆக 17, 2024 18:41

நாட்டிற்கு நல்லது செய்தவர்களை மறந்துவிட்டோம். காமராஜ் சக்ரவர்த்தி ராஜகோபாலன் மொரார்ஜி ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்றோர்களை மறந்து விட்டோம். முத்துவேல் கருணாநிதியை மறக்கமாட்டோம். உடனே நினைவிற்கு வருவது. ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி. ஜவஹரை மறக்கமுடியாது. காரணம் இந்திரா ராஜிவ் ராகுல்


பேசும் தமிழன்
ஆக 17, 2024 18:28

வேறு யாரு.... நம்ம பப்பு கம்பெனி ஆட்களை தான் சொல்லாமல் சொல்கிறார்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி