மேலும் செய்திகள்
அரசு வீட்டை காலி செய்ய லாலு மனைவி ரப்ரி மறுப்பு
7 minutes ago
வாலிபருக்கு வெட்டு
1 hour(s) ago
புதுச்சேரியில் 30ம் தேதி யு.பி.எஸ்.சி., தேர்வு
1 hour(s) ago
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வசிக்கும் பாலியல் தொழிலாளர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான ஆவணங்களை அளிக்க சிரமப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர்களுக்கென சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.
இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. இதற்கான படிவத்தை பூர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட வாக்காளர், 2002ம் ஆண்டில் வசித்த விபரங்கள் அவசியம். இந்நிலையில், கொல்கட்டாவில் உள்ள சோனாகாச்சி பகுதியில் வசித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., கணக் கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சில பெண்கள், வீட்டை விட்டு வெளியேறி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கனவே ஓட்டளித்த விபரங்கள் தெரியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக, குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கேட்க முடியாத நிலையிலும் அவர்கள் உள்ளனர். இதனால், பாலியல் தொழிலாளர்கள் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய, தேர்தல் கமிஷன் உதவ வேண்டும் என வலியுறுத்திய பல்வேறு சமூக அமைப்புகள், இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியிருந்தன. இதையடுத்து, சோனாகாச்சியில் உள்ள பல பாலியல் தொழிலாளர்களுக்கு இதில் உதவும் வகையில், சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
7 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago