உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டம் கண்ட மேடை: பீஹார் பிரசாரத்தில் ராகுல் அதிர்ச்சி

ஆட்டம் கண்ட மேடை: பீஹார் பிரசாரத்தில் ராகுல் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது, மேடை திடீரென ஆட்டம் கண்டதுடன், சிறிது கீழே சரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகுலை, மேடையில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vbutlqd2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் மற்ற இண்டியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். ராகுல் மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தவாறு நடந்து சென்றார்.அப்போது திடீரென மேடையின் ஒரு பகுதி உடைந்ததால், சிறிதளவு கீழே சரிந்தது. இதில் மேடை ஆட்டம் கண்டது. மேடையில் இருந்த ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தடுமாறினர். உடனே சுதாரித்துக்கொண்ட மற்றவர்கள் ராகுலை தாங்கிப்பிடித்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

theruvasagan
மே 27, 2024 22:40

நாலாம் தேதி ஆட்டம் காணவேண்டியது முன்னாடியே நடந்துட்ட மாதிரி இல்லை.


ராமகிருஷ்ணன்
மே 27, 2024 22:34

தேர்தல் முடிவுகள் பற்றிய சகுனம் காட்டி விட்டது இண்டி கூட்டணி ஆட்டம் கண்டு விட்டது, காங்கிரஸ் குழியில் விழுந்து விடும் என்று இயற்கை எச்சரிக்கை விட்டது.


ems
மே 27, 2024 22:32

நியூட்டன் மூன்றாம் விதி...


kulandai kannan
மே 27, 2024 22:02

மரண பயம் தெரிகிறது.


sankaranarayanan
மே 27, 2024 21:32

திடீரென மேடையின் ஒரு பகுதி உடைந்ததால், சிறிதளவு கீழே சரிந்தது. இது எதை காட்டுகிறது இனி இந்த கூட்டணி உடையும் எவ்வளவு நாட்களில் என்று சொல்ல முடியாது சகுனம் சரியில்லை பேசாமல் பப்பு தனது வயதான பாட்டியை பார்க்க இத்தாலி செல்லலாம் கூட்டணியில் உள்ளவர்களில் யார்தான் இந்த பப்புவை மேடையிலிருந்து கீழே தள்ள முயற்சித்தார்களோ தெரியவில்லை


பேசும் தமிழன்
மே 27, 2024 19:03

மேடை அமைத்ததிலும்.... இந்தி கூட்டணி ஆட்கள் ஊழல் மூலம் வேளையை காட்டி விட்டார்கள் போல் தெரிகிறது..... அடப்பாவிகளா அங்கேயும் கைவரிசையை காட்டி விட்டீர்களா ???


selva kumar
மே 27, 2024 18:13

சகுனம் சரியில்லய்யப்பா


எஸ் எஸ்
மே 27, 2024 18:09

"நல்வாய்ப்பாக" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதை பார்த்தால் திராவிட சிந்தனையாளர் ஒருவர் உங்கள் செய்தி ஆசிரியர் ஆகி விட்டாரோ??


J.V. Iyer
மே 27, 2024 17:14

காங்கிரஸையே ஆட்டம்காண வைக்கும்


Senthoora
மே 27, 2024 17:38

ஒருநாள் களுக்கும் இப்படி ஒரு ஆட்டம் காணும் சம்பவம், வாகனத்திலோ அல்லது விமானப்பயணத்திலோ ஆட்டம் காணும் பொது தெரியும் ஒரு மனிதனின் திடீர் அதிச்சி.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை