உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீடுக்கு ஆதரவு: மோகன் பாகவத் உறுதி

இட ஒதுக்கீடுக்கு ஆதரவு: மோகன் பாகவத் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ''அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது,'' என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிடும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.இதற்கு பதில் அளித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது: இட ஒதுக்கீட்டுக்கு ஆர்.எஸ்.எஸ்., எதிராக இருப்பதாக சமூக வலைதளங்களில், 'வீடியோ' பகிரப்படுகிறது. இது முற்றிலும் தவறானது.பொது வெளியில் இட ஒதுக்கீட்டை போதித்துவிட்டு, திரை மறைவில் அதற்கு எதிரான பணிகளை செய்யும் சிலர் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். அதில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை.இட ஒதுக்கீட்டின் தேவை உள்ள வரை, அது தொடர வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Srinivasan Krishnamoorthi
ஏப் 29, 2024 15:29

கிருஷ்ணசாமி போல தங்கள் சமுதாயத்தை தரம் உயர்ந்ததாக அறிவிக்க வேண்டி போராட்டமே செய்தாலும் எந்த அரசியல் கட்சியும் reservation in education employement allotments and promotions எதிலும் குறை வைக்க போவதில்லை


அப்புசாமி
ஏப் 29, 2024 13:09

இதை ஆர்.எஸ்.எஸ் ஆளுங்களே நம்ப மாட்டாங்க.


tamilan
ஏப் 29, 2024 13:09

அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதன் காரணமாக காங்கிரஸ் மீது நம்பிக்கை பிறந்துள்ளது


Sampath Kumar
ஏப் 29, 2024 11:28

பிஜேபி காரன் மட்டும் இட ஒதுக்கீட்டில் கை வை பார்க்கலாம் அப்புறம் தெரியும் இந்திய என்றால் ஏது என்று உங்க குமபலை வேறு அறுக்க இந்தியாவே திரண்டு ஏழும் ஜாக்கிரதை


Aram Kumar
ஏப் 29, 2024 12:03

அப்போ தகுதி திறமைல்லாம் தேவை இல்லை அப்படித்தானே , சாதி மத சார்பற்ற நாடு ஆனா, சாதி மத அடிப்படையில் ஒதுக்கீடு, விளங்கும் இந்த தேசம்


J.V. Iyer
ஏப் 29, 2024 09:20

இவருதான் மனுஷன், நல்ல மனுஷன்


J.Isaac
ஏப் 29, 2024 14:00

இவர் எந்த கட்சி ?


Sampath Kumar
ஏப் 29, 2024 08:51

இந்தஇட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவோம் என்ற சொன்னது யாரு ? அமித் ஷா தான் இல்லை என்று மறுக்க முடியுமா ?


ஆரூர் ரங்
ஏப் 29, 2024 09:43

மறுக்கிறேன். எக்காலத்திலும் அவர் இடஒதுக்கீடு (எனும் மடத்தனமான ஒன்றை) ஒழிக்கப்படும் என்று கூறியதில்லை..இந்த பத்தாண்டுகளில் பல இனத்தவர்கள் SC, ST பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை