உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவுரி லங்கேஷ் கொலையாளி ஜாமின் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

கவுரி லங்கேஷ் கொலையாளி ஜாமின் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கொலையாளிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருந்த ஜாமினை, ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை, கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி, வீட்டின் முன்பு வைத்து ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. இந்த வழக்கில் விஜயபுராவை சேர்ந்த பரசுராம் வாக்மோர், தார்வாடின் கணேஷ் மிஷ்கின், மோகன் நாயக் உட்பட 17 பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தது.கடந்த ஆண்டு டிசம்பரில் மோகன் நாயக்கிற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து கவுரியின் சகோதரி கவிதா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திரா சர்மா விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் மனு மீது விசாரணை நடந்தது.

100 சாட்சிகள்

அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் சித்தார்த் லுத்ரா, அவிஷ்கர் சிங்வி, ரகுபதி ஆகியோர் வாதாடுகையில், 'கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக, இதுவரை 137 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளன. மேலும் 100 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. ஜாமினில் வெளியே இருந்தாலும், மோகன் நாயக் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்' என்றனர். மனுதாரர் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது.

ஒத்துழைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ, ஜாமின் விதிகளை மீறி செயல்பட்டாலோ அவர் மீதான ஜாமினை ரத்து செய்யலாம். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார். 'ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்ததையும், சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.'இதனால், உயர் நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
ஆக 23, 2024 22:38

கஷ்டம் பட்டு படித்து case வெற்றி பெற உழைக்கும் வக்கீல்கள் ஐ விட ஜாமீன் மட்டும் வாங்கி கொடுக்கும் வக்கீல்கள் ஜமீன் போல ஜாம் ஜாம் னு வாழ முடியும். அது போல தான் உச் சா நீதிமன்றம் உம் உள்ளது. ஜாமீன் கொடுப்பது மட்டும்தான் வேலை


S Regurathi Pandian
ஆக 23, 2024 11:05

பொதுவாக ஜாமீன் வழங்க அரசு / விசாரணை தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் 7 ஆண்டுகள் விசாரித்தும் இன்னமும் விசாரிக்க வேண்டும் என்று கூறும் விசாரணை அமைப்பு இங்கே குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறுகின்றனர். சந்தேகமாகத்தான் உள்ளது


டில்லிகுமார்
ஆக 23, 2024 07:56

நமது விசாரணை அமைப்புகளின் வேலை லட்சணம் புரியுதா? தண்டத்துக்கு அஞ்சு வருசமா விசாரிக்கறாங்களாம். இன்னும் 100 பேரை விசாரிக்கணுமாம். கேக்கவே கேவலமா இருக்கு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை