உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடுகிறது உச்சநீதிமன்றம்.டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ள புதிய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேடுகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பியது. ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் வீட்டில் வைத்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பு, கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை விசாரணை நடத்திய நீதிபதி சஞ்சீவ் கண்ணா இன்று (ஜூலை 12) தீர்ப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian Iyer
ஜூலை 12, 2024 04:35

Judgement reserved to be in jail for ever


RAAJ68
ஜூலை 12, 2024 04:27

உச்ச நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்க துடித்து கொண்டுள்ளது.


தாமரை மலர்கிறது
ஜூலை 12, 2024 02:20

நூறு கோடி ரூபாயை ஆட்டையை போட்ட கெஜ்ரிக்கு தண்டனை உறுதி. மோடி ஆட்சியில் ஊழல் செய்தால், முதல்வராக இருந்தாலும் உள்ளே போக வேண்டும் தான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 12, 2024 00:03

நூறுகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு கெஜ்ரிக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கண்டிப்பாக விதிப்பார். மோடி ஆட்சியில் ஊழல் செய்தால், கெஜ்ரி மாதிரி சிறைக்குத்தான் போகவேண்டும். கெஜ்ரி ஒரு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு டெல்லி முதல்வர் பதவி பறிபோகும். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி தீர்ப்பளிப்பார்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை