மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது கர்நாடகா மக்கள் நம்பிக்கை
15 minutes ago
டிஜிட்டல் மயமாகிறது உர மானிய திட்டம்
16 minutes ago
பாகல்கோட் மாவட்டம், ஐஹொலே என்ற கிராமத்தில் 125 புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. கோவில் கிராமமே என்று பெருமையுடன் சொல்லி கொள்ளலாம்.ஐஹொலேவில் ராமலிங்க கோவில், கலகநாத கோவில், மாதின் கோவில், திரியம்பகேஸ்வரா கோவில், குந்திகுடி, அரலபசப்பா கோவில், சங்கமேஸ்வரா கோவில், கவுரி கோவில், ஹுச்சிமல்லி கோவில் உட்பட 125 கோவில்கள் இருக்கின்றன.ஆன்மிக சுற்றுலா செல்ல ஐஹொலே சிறந்த கிராமம் என்று, அங்கு சென்று வந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பல கோவில்கள் இருந்தாலும், துர்கா கோவில் பிரபலமானது.எட்டாம் நுாற்றாண்டில் முதலில், சூரிய பகவானுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், 13ம் நுாற்றாண்டிற்கு பின், நடந்த போர்களின் போது, கோவிலுக்கு மேல் துர்க்கம் அல்லது கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டதால், 'துர்கம்' என்று அழைக்கப்பட்டது.இடிபாடுகளாக 19ம் நுாற்றாண்டில் இந்த தளம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பின், சீரமைக்கப்பட்டது. சைவ, வைணவ, சாக்த, வைதீக சமயங்களின் தெய்வங்களின் உருவங்களை சித்தரிக்கும் அலங்காரமான சிற்பங்களை கொண்டுள்ன. கோவில் முழுதும், கற்களால் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிதிலமடைந்த கோபுரம் பாதியை காண முடிகிறது.நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. சாளுக்கிய மன்னர்களின் கட்டடக்கலைக்கு ஒரு அரிய எடுத்துக்காட்டாக உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் சேர்க்கும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகின்றன.கர்நாடகாவில் உள்ள பழமையான சூரிய பகவான் கோவில்களில் ஒன்றாக திகழ்வதால், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.புராதன கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. சீரமைக்கப்பட்ட பின், 19ம் நுாற்றாண்டிற்கும், தற்போதைக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.- நமது நிருபர் -
15 minutes ago
16 minutes ago