மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
பெங்களூரு: பெங்களூரு குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக, 131 கோடி ரூபாயில் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதற்கு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வறட்சியின் காரணமாக, பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, பெங்., மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை நடந்தது.கூட்டத்தில், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், பெங்., குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உட்பட எட்டு மண்டல கமிஷனர்கள் பங்கேற்றனர்.நகரின் 58 இடங்களில் தண்ணீர் பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் போர்வெல் எனும் ஆழ்துளை கிணறுகள் தோண்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.இதற்காக, மஹாதேவபுரா, ஆர்.ஆர்.நகர், பொம்மனஹள்ளி, தாசரஹள்ளி, எலஹங்கா மண்டலங்களுக்கு 131 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.செயலற்று இருக்கும் சுத்தமான குடிநீர் பகுதிகளிலும், ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
6 hour(s) ago