உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்

தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்

பெலகாவி: லோக்சபா தேர்தல் அறிவித்ததால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பெலகாவி மாநகராட்சி மேயர், அரசு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார்.பெலகாவி மாநகராட்சி மேயர் சவிதா காம்ப்ளே. நேற்று மதியம் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.உடனடியாக நகரின் கோலாப்பூர் ரவுண்டானா காரை நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், மேயரின் நற்செயலை பாராட்டினர். அத்துடன், அவர் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை