உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திமுக.,வின் தவறான ஆட்சியால் மக்கள் விரக்தி: பிரதமர் மோடி

திமுக.,வின் தவறான ஆட்சியால் மக்கள் விரக்தி: பிரதமர் மோடி

புதுடில்லி: ‛‛ இன்று மாலை 5 மணிக்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக கலந்துரையாட உள்ளேன்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர், ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லோக்சபா தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக ‛ எனது பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக இன்று( மார்ச் 29) மாலை 5 மணிக்கு கலந்துரையாட காத்திருக்கிறேன்.தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ., அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.நமது கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதும் உண்மைதான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

முருகன்
மார் 29, 2024 16:57

மக்களிடம் ஓட்டோ வாங்க முடியாத கட்சிக்கு தான் விரக்தி அதிகமாக உள்ளது


Palanisamy Sekar
மார் 29, 2024 16:32

அய்யா எப்படியாவது தமிழக மக்களை நீங்கள்தான் காப்பாற்றியாக வேண்டும் திமுகவின் கொள்ளை அனுதினமும் செய்திகளாக வந்துகொண்டே உள்ளது திருடி தண்டனை பெற்றவர் எல்லாம் உங்களை கேலி பேசுறாங்க சாராயம் பெருக்கெடுத்து ஓடுது போதை மாநிலமாக தமிழகம் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டே உள்ளது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக நீங்கள் ஏதேனும் செய்தே ஆகணும் என்கிற கட்டாயத்தில் மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள் முக்கியமாக ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிபப்து மக்களுக்கு அவ்வளவாக திருப்தி கிடையாது நீங்கள் தலையிட்டு அந்த விஷயத்தை உடனே கவனிக்க வேண்டாமுங்க


rameshkumar natarajan
மார் 29, 2024 16:20

I think DMK has given sleepless nights


Indian
மார் 29, 2024 12:42

ஓட்டு போட்டால் அதன் விளைவுகள் இப்போ தெரியாது பின்னரே தெரியும் பட்டு தெரிவதை விட படாமல் புரிந்துகொள்வது நல்லது /


Sivaselvan S
மார் 29, 2024 13:26

விடியா ஆட்சியில் நிறைய பட்டு விட்டோம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை