உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு: சீரமைப்புகுழு பரிந்துரையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் கெடு

நீட் தேர்வு முறைகேடு: சீரமைப்புகுழு பரிந்துரையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அமைக்கப்பட்ட சீரமைப்புகுழு, தனது பரிந்துரையை வரும் செப்-30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் கெடு விதித்துள்ளது.நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவாக, 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான பெஞ்ச் விசாரித்தது. இன்றைய விசாரணைக்கு பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் கோர்ட்டுக்கு இல்லை. அதே நேரத்தில் இஸ்ரோ முன்னாள் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் குழு, தனது பரிந்துரை அறிக்கையை வரும் செப். 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வு முறைகளை வலுப்படுத்த ஏற்று கொள்ளக்கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

GMM
ஆக 02, 2024 18:22

தேர்வு முறையை வலுப்படுத்த ஏற்று கொள்ள கூடிய ... யார் ஏற்று கொள்ள வேண்டும்? மாநிலம், மாணவர், மருத்துவ கல்லூரி... இவர்கள் பொது தேர்வு வேண்டாம் என்பர். தனியார் கல்வி விற்பனைக்கு என்பர். ஆள் மாறாட்டம், கேள்வி தாள் முன் வெளியீடு... போன்றவை விசாரணையில் தெரிய வருகிறது. இதனை தடுக்க பரிந்துரை. மருத்துவம் போன்ற நேரடி ஈடுபாடு கல்வியில் இட ஒதுக்கீடு முற்றிலும் நீக்க வேண்டும். முற்பட்ட வகுப்பு அதிகம் விரும்பாத அலோபதி கல்வி? இட ஒதுக்கீடு விரும்பும் அரசியல் கட்சிகள், கட்சியில் இட ஒதுக்கீடு அமுல் படுத்த வேண்டும்.


ES
ஆக 02, 2024 12:41

Neet needs to be removed its full of fruads


R K Raman
ஆக 02, 2024 17:19

வாட் about தன் ?


R K Raman
ஆக 02, 2024 17:21

Why not do this for Plus 2 exam in Tamil Nadu


Mario
ஆக 02, 2024 12:15

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 98% மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளார்.


ஆரூர் ரங்
ஆக 02, 2024 13:20

எம் ஏ படித்த அண்ணா SSLC யில் ஃபெயில் ஆனவராமே. தவறான ஒப்பு நோக்கு


Iniyan
ஆக 02, 2024 12:15

வழக்குகளை முடிக்க நீதி மன்றங்களுக்கு கேடு விதிக்க சட்டம் இயற்றி விதண்டாவாத நீதி மன்றங்களை கட்டு படுத்த வேண்டும்


Sree
ஆக 02, 2024 11:57

முட்டு ஆட்கள் நிறைந்த அரங்கம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை