உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநகராட்சி அதிகாரி மீது கோப்புகளை வீசி எறிந்த பெண் மேயர்

மாநகராட்சி அதிகாரி மீது கோப்புகளை வீசி எறிந்த பெண் மேயர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் கான்பூர் மாநகராட்சி ஆய்வு கூட்டத்தின் போது அதிகாரி மீது கோப்புகளை பெண் மேயர் வீசி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.உ.பி.மாநிலம் கான்பூர் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி மேயர் பிரமீளா பாண்டே தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் குறித்து மேயர் கேட்டறிந்தார். இதில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக ஆய்வு நடந்த கூட்டத்தின் போது புகார் கூறப்பட்டது. புகாரை மறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரி மேயரிடம் தவறான தகவலை தெரிவித்தார்.அவரது விளக்கம் திருப்தியில்லாததால் ஆத்திரமடைந்த மேயர் பிரமீளா பாண்டே , தன் மேசை மீது இருந்த கோப்பினை அதிகாரி மீது வீசி எறிந்து திட்டினார். இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Thangaraj
ஜூன் 15, 2024 10:51

இனி அந்த அதிகாரியின் ஜாதியை தேடுவார்கள்.


Thangaraj
ஜூன் 15, 2024 10:47

இதில் ஜாதியை தேடுவார்கள். பாண்டே பிராமணர். அதிகாரியின் ஜாதியை தேடுவார்கள். ஒரு வேளை அவர் பிராமணர் இல்லை என்றால் நாடே கொந்தளிக்கும் விதமாக நம்ம ஊர் சமூகப் போராளிகள் கிளம்புவார்கள்.


Raghu R
ஜூன் 15, 2024 07:06

இதுவே ஒரு அதிகாரி பெண்ணாகவும் மேயர் ஆணாகவும் இருந்து இந்த சம்பவம் நடந்து இருந்தால் பெண்ணை அவமானபடுத்திவிட்டார்கள் என்று அனைவரும் பேசியிருப்பார்கள். பலரும் பலவிதமாக போராட்டங்களை அறிவித்து இருப்பார்கள். அதிகாரியின் தவறு மறைக்கப்பட்டு இருக்கும். நல்லவேளை இங்கு அப்படி நடக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.


chennai sivakumar
ஜூன் 15, 2024 01:41

பொதுவாக நம் நாட்டில் அரசு வேலை என்றால் ஆபிசு வருவதற்கு சம்பளம். வேலை செய்வதற்கு கிம்பலம் என்ற மனப்பான்மை ஆணி வேர் போல ஆகிவிட்டது. அந்த அதிகாரி மேயருக்கு எதாவது கொடுத்து சரி கட்டி விடுவார் பாருங்கள். ஆண்டவனால் திருத்த முடியாது. Churchill சொன்னது போல இந்தியர்களை அடிமையாக வைத்து வேலை வாங்க வேண்டும் என்பதை இதை போல நிறைய நிகழ்வுகள் நிரூபித்து விட்டன


Ravichandran S
ஜூன் 15, 2024 07:15

அதுதான் தமிழகத்தில் நடக்கிறதே


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 22:13

பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக புகார் கூறப்பட்டதாம் ......சென்னையிலும் இந்த திட்ட பணிகள் நடக்குது ......ஆனாலும் ஊரெங்கும் சென்னையில் வெறும் பாதாளம்தான் இருக்குது ....இங்கே இது பற்றி புகார் கொடுத்தால் அப்பறம் புகார் கொடுத்தவன் வீட்டுக்கு ஆட்டோ வரும் ...


சிவம்
ஜூன் 14, 2024 21:49

மேயரின் கோபம் நியாயம் என்றாலும் கோப்புகளை வீசி எறிந்தது மட்டுமே ஊடகங்களுக்கு விருந்து. மாறாக அந்த அதிகாரியை உடனே சஸ்பென்ட் பண்ணி இருக்கலாம். இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை