உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

புதுடில்லி: ‛‛ உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது '' என பிரதமர் மோடி லோக்சபாவில் பேசினார்.

பதிலுரை

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தேஜ கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டனர். மக்கள் எங்களின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து ஓட்டு போட்டனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.

சகித்து கொள்ள முடியாது

இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது.10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ள எமது அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். எக்காரணத்தை கொண்டும் ஊழலை சகித்து கொள்ள முடியாது. இந்தியாவுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம். இந்தியாவின் மதிப்புசர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.ஓட்டு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது

முடிவு

அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது. இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கும் மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே எங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது.

திட்டங்கள்

வளர்ச்சியடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தனர். 2047 ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார். அதுனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சபாநாயகர் கண்டிப்பு

பிரதமர் மோடி பதிலுரையை துவங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் போட்டபடியே இருந்தனர். ‛மணிப்பூர்... மணிப்பூர்...' எனவும், நீதி வேண்டும் எனவும், கோஷம் போட்டதுடன் மேஜையை தட்டினர். மணிப்பூர் குறித்து பதிலளிக்க வேண்டும் என இடையூறு ஏற்படுத்தும் கோஷம் போட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‛‛ எம்.பி.,க்கள் அனைவரும் அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தில் பேசுங்கள். பிரதமர் பேச்சின் போது எதிர்க்கட்சியினரின் அமளி மிகவும் தவறான செயல் என கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

venugopal s
ஜூலை 03, 2024 06:39

இவர்களின் மதச்சார்பின்மையின் லட்சணம் தெரிந்து தான் இன்று வரை தமிழக மக்கள் பாஜகவை நிராகரித்து வைத்து உள்ளனர்!


hari
ஜூலை 03, 2024 09:11

200 ரூபாய்க்கு இவளோ கூவல் தேவையில்லை கொத்தடிமையே... தமிழ்நாட்டில் பாஜக வின் வாக்கு எண்ணிக்கையை பார்


prabhu
ஜூலை 02, 2024 22:04

அப்போ நீங்கள் இதுவரை பொய் ஆனா மதச்சார்பின்மையை பின் பற்றி வந்தீர்களா உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை


சோழநாடன்
ஜூலை 02, 2024 22:00

இஸ்லாமியர்களை இழித்தும் பழித்தும் பேசும் மோடி எப்படி மதசார்பின்மையைக் கடைபிடிப்பார். அவர் பேசுவது எல்லாம் பொய்தான். அடுத்தத் தேர்தலில் பாஜக பழையபடியே 2 இடங்களில் வெற்றிபெற்றாலே அதிசயம். இராகுல் மோடியை அடித்து, துவைத்து, நார்நாராகக் கிழித்து, துணிக்கொடியில் தொங்கவிட்டும் மோடி இன்னும் பாடம் கற்காமல் காங்கிரஸ் கட்சியைச் சுரண்டிக்கொண்டிருப்பது மோடியிடம் ஒரு திட்டமும் இல்லை என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.


haribabu
ஜூலை 02, 2024 21:01

காண் கிரஸ் க்கு சாட்டை அடி முழி பிதுங்கி கத்திய கான் கிரஸ் கூட்டம்


sankaranarayanan
ஜூலை 02, 2024 20:35

பாராளுமன்றத்தில் இனிமேல் ஒவ்வொரு மேஜையின்மீதும் தடிமானமான ரப்பரால் ஆனா போர்வைபோன்று ஒரு லேயர் மூடப்பட்டு இருந்தால், எதிர் கட்சியினர் செய்யும் அமளி மேஜையைத்தட்டும்போது சத்தமே வாராது இடையூரும் இருக்காது அவர்கள் கைதான் நோகும் எப்படி என் யோஜனை மத்திய அரசாங்கம் இதை ஏற்று உண்ட அமல் படுத்த வேண்டும்


Barakat Ali
ஜூலை 02, 2024 20:16

சிறுபான்மையினரை மகிழ்விப்பதுதான் மதச்சார்பின்மை என்கிற கொள்கையை நேரு காலம் முதலே பின்பற்றி வருகிறது காங்கிரஸ் .... நேருவே ஒரு இஸ்லாமியர்தான் ... கஷ்மீரி பண்டிட் என்பது முழுப்பொய் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 02, 2024 19:28

உண்மையான மதச்சார்பின்மை என்றால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்காக பாடுபடுவது அல்ல என்பது தான். உண்மையான மதச்சார்பின்மை என்பது அனைத்து தரப்பு மக்களும் ஒரே சட்டம் ஒரே கொள்கை. வக்பு வாரியம் சுதந்திரமாக இயங்கலாம். ஆனால் இந்து கோயில்கள் மட்டும் கிறிஸ்துவ அதிகாரி முஸ்லிம் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். முஸ்லிம் கிறிஸ்துவ கோயில்களில் அரசு தலையிடாது ஆனால் இந்துக்கள் கோயில்களை மட்டும் ஆட்டி படைக்கும் அரசு. இது தான் மதச்சார்பின்மையா? முஸ்லிம் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. இது மதச்சார்பின்மையா? வேங்கை வயல் சம்பவம் ஏன் மூடி மறைக்க வேண்டும்? ஏனெனில் இது போலி மதச்சார்பின்மையினால். வேங்கை வயல் சம்பவம் கண்டு பிடிக்க முடியாத சிபிசிஐடி எப்படி கள்ளக் குறிச்சி சம்பவத்தை கண்டுபிடிக்கும். மதச்சார்பின்மை என்பது அனைத்து மதத்தினரும் அவரவர் மதத்தின் நம்பிக்கையில் சுதந்திரமாக இருப்பது தான். மதமாற்றம் மதச்சார்பின்மை கிடையாது.


krishnan
ஜூலை 02, 2024 19:26

ராகுல் ஜி மும்பை , டெல்லி , கோயம்பத்தூரில் யார் குண்டு வைத்தது ? இந்துக்கலா ? godra வில் s6 cochil பயணம் செய்த இந்துக்களை தீ வைத்து கொளுத்திய கிராம வாசிகள் இந்துக்களா ? ஒரு புத்தகத்தின் ஓரம் கிழிந்து விட்டால் தெருவெல்லாம் தீ வைப்பவர் யார்? இந்துக்களா ? காஷ்மீரில் இந்து பெண்களை கற்பழித்து கொன்றவர்கள் எந்த சமூகம்? இந்துக்கலா ? குண்டு வெடித்தது என்றாலே யார் ஞாபகம் வரும் ? இந்துக்களா


GMM
ஜூலை 02, 2024 19:12

மதசார்பின்மை என்ற வார்த்தை ஜாலம் மூலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற காட்சிகள் / கட்சிகள் சிறுபான்மை வாக்கை பெற்று வந்தனர். இந்துக்கள் வாக்கு சார்பற்றது. பிஜேபி மதம் சார்ந்த கட்சி என்று பயமுறித்தி விட்டனர். உண்மையான சார்பின்மை இதுவரை பாரதத்தில் துவங்கவில்லை. மக்கள் தொகை பெரும்பான்மை ஆன பின் சிறுபான்மை அந்தஸ்து எப்படி? மதத்திற்கு ஒரு சட்டம். இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி அளவிற்கு அதிகமாக மத மாற்றம். இதன் விடை தான் மத சார்பற்ற நிலை. கடந்த 10 ஆண்டுகளில் பிஜேபி ஊழலை நிறுத்த / குறைக்க முடியவில்லை. இதனால் பல கட்சிகள் பயமின்றி ஊழல் செய்து வருகின்றனர். அச்சம் இன்றி பத்திரிக்கை செய்தி கொடுத்து விட்டு, மக்களை குழப்புகின்றனர். குற்ற வீரியத்திற்கு அரசியல் வழக்கறிஞர்கள் முக்கிய காரணம்.


பேசும் தமிழன்
ஜூலை 02, 2024 19:06

உண்மை தான்....காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ...மதச்சார்பின்மை என்று கூறி விட்டு ...இந்துக்களுக்கு எதிரான செயல் மற்றும் ...முஸ்லீம் , கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறார்கள் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை