உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக பணக்காரர் பட்டியலில் டாப்: மஸ்கை முந்திய பெர்னார்ட் அர்னால்ட்

உலக பணக்காரர் பட்டியலில் டாப்: மஸ்கை முந்திய பெர்னார்ட் அர்னால்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு, ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் (LVMH) சி.இ.ஓ பெர்னார்ட் அர்னால்ட் முன்னேறினார். பட்டியலில், பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும், கவுதம் அதானி 16 இடத்திலும் உள்ளனர்.உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2வது இடத்தில் இருந்து வந்தார். இதையடுத்து டெஸ்டாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். தற்போது எக்ஸ் சமூகவலைத்தளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் பிரெஞ்ச் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். எலான் மஸ்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அதேநேரத்தில் பெர்னார்ட் அர்னால்டின் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் (LVMH) பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. தற்போது, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.5 பில்லியன் டாலராக உள்ளது. இதனால், எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு, ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் (LVMH) சி.இ.ஓ பெர்னார்ட் அர்னால்ட் முன்னேறினார்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:

பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டாலர்)எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்)ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்)லாரி எலிசன் (142.2 பில்லியன்டாலர்)மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டாலர்)வாரன் பஃபெட்(127.2 பில்லியன் டாலர்)லாரி எலிசன் (127.1 பில்லியன்டாலர்)பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டாலர்)செர்ஜி பிரின் (121.7 பில்லியன்டாலர்)ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன்டாலர்)ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11ம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 16ம் இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டாலரும், கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜன 29, 2024 19:52

முதல் பத்திற்குள் இந்திய தொழில் அதிபர்கள் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒவ்வொரு இந்தியரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு பெருமையாக நடக்கவேண்டிய தருணம் வந்துகொண்டிருக்கிறது.


R S BALA
ஜன 29, 2024 16:18

இத மாதிரி லிஸ்ட்டெல்லாம் வெளியிட்டு ஏன்யா காண்டு ஏத்துறீங்க..


rsudarsan lic
ஜன 29, 2024 13:57

இந்த பட்டியலை யார், யாருடைய நலனுக்காக வெளியிடுகிறார்கள்? இந்த பெரிய மனிதர்களிடம் கறுப்புப்பணமே இல்லைபோலும். தினமும் காலையில் எழுந்த உடன் மீடியாவுக்கு விவரங்களைத் தெரிவித்து விட்டுதான் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள் போல


Raa
ஜன 29, 2024 12:08

லிஸ்டில் கடைசியில் உள்ள ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன்டாலர்) - இவர் பணம் கொண்டு தமிழ் நாட்டின் 8 லக்ஷம் கோடி கடனை அடைந்துவிடலாம். ஆனால் இங்குள்ளவர்கள் வைத்துள்ள கணக்கில் காட்டப்படாத சொத்தை வைத்து அமெரிக்காவின் முழு கடனையும் அடைத்துவிடலாம் .


திருட்டு ரயில் பரம்பரை
ஜன 29, 2024 12:08

கட்டுமரத்தை முதல் இடத்தில் சேர்க்காதது நம் நாட்டிற்கு இழைத்த பெரும் அநீதி அவமானம், இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்! ????


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ