உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்ல...பாஸ் ;அப்புறம்...பெயில்: ‛‛ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

முதல்ல...பாஸ் ;அப்புறம்...பெயில்: ‛‛ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி. மாநிலம் பல்கலை. ஒன்றின் தேர்வு விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம், மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பெயரை விடையாக எழுதிய 4 மாணவர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்கி பாஸ் ஆனதும், பின் மறு மதிப்பீடுசெய்ததில் பெயில் ஆனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உபி. மாநிலத்தில் உள்ள முக்கிய பல்கலைகழகங்களில் பூர்வாஞ்சல் பல்கலைகழகமும் ஒன்று. இங்கு சமீபத்தில் டி.பார்ம் எனும் மருந்தியியல் படிப்பிற்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நான்கு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது குறித்து முன்னாள் மாணவர் ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நான்கு மாணவர்கள் எழுதிய விடைத்தாளை நகலாக கேட்டார்.அதற்கு பல்கலை. நிர்வாகம் அளித்துள்ள தகவலில், நான்கு மாணவர்கள் விடைத்தாளில் ‛‛ஜெய் ஸ்ரீராம்'' எனவும், பிரபல கிரிக்கெட் வீரர்களின் பெயரை விடையாக எழுதி பாஸ்ஆனது தெரியவந்தது.அவர்கள் பாஸ் ஆனது குறித்து மீண்டும் விடைத்தாள் பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு தாள் திருத்தப்பட்டதில் அவர்கள் பெயில் ஆனது தெரியவந்தது. விவரம் கேட்ட மாணவர் , பல்கலை வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு இது சம்பந்தமாக புகார் அனுப்பினார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.இது குறித்து பல்கலை. துணைவேந்தர் கூறுகையில் கவர்னர் உத்தரவு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Palanisamy Narayanasamy
ஏப் 26, 2024 15:43

என்னாங்கடா நடக்குது இந்த கோமாளிகள் நாட்டுல


அப்புசாமி
ஏப் 26, 2024 11:36

ராமா.. நம்புனவங்களை இப்பிடி செய்யலாமா?


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2024 23:25

அந்த காலத்திலிருந்தே பாஸ் ஆக உபயோகிக்கும் முறை தான் இது இதற்கு தான் கோட்டா கொடுக்க கூடாது என்பது


venugopal s
ஏப் 25, 2024 22:32

என்ன அக்கிரமம் இது! ராம ராஜ்யம் நடக்கும் மாநிலத்தில் ஸ்ரீராமஜெயம் என்று விடை எழுதிய மாணவர்கள் தோல்வி அடைந்தனரா, நம்ப முடியவில்லையே! மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஒரு சட்டம் இயற்ற வேண்டும், இனிமேல் எல்லா பரிட்சைகளிலும் ,அது ஐ ஏ எஸ் அல்லது ஐ ஐ டி ஜே ஈ ஈ ஆக இருந்தாலும் சரி, ஸ்ரீராமஜெயம் எழுதிய மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று! இதையே பாஜக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தால் நிச்சயம் வெற்றி தான்!


Ramesh Sargam
ஏப் 25, 2024 21:50

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் அமைய கூடாது கடவுளே, கருணாநிதி பெயர், பெரியார் பெயர் எழுதினாலே பாஸ் செய்துவிடுவார்கள்


ஆரூர் ரங்
ஏப் 25, 2024 21:35

இப்போதும் துண்டு சீட்டை நம்பியிருப்பவர்கள் இளமையில் கல்லூரித் தேர்வின் போது என்ன செய்திருப்பர்?


தமிழ்
ஏப் 26, 2024 07:59

நீ உன் இளமைக்கல்வியில் என்ன செய்திருப்பியோ அதையேதான் செய்திருப்பார்கள் ....


Rajathi Rajan
ஏப் 25, 2024 20:25

ஆட்சில் உபி மாணவர்களின் அறிவு திறன் இப்படி தான் இருக்கும்,,,,


Bhakt
ஏப் 25, 2024 21:11

இங்க திராவிஷ மாதிரி ஆட்சியில் தமிழ்லயே ஏகப்பட்ட பேர் fail ஆகறாங்க


முருகன்
ஏப் 25, 2024 20:21

நாடு கற்காலத்திற்கு சென்று கொண்டு இருப்பது வேதனையான ஒன்று


ramesh
ஏப் 25, 2024 20:21

இப்படி படிப்பு அறிவு இல்லாதவர்கள் உத்ரா பிரதேசத்தில் ஐஎஎஸ் முதலாவதாக வந்ததாக கூறி பாஸ் செய்து வைக்க படுவார்கள்


சுராகோ
ஏப் 25, 2024 21:09

தலைவா எதற்கும் எதற்கும் முடிச்சி போடுகிறீர்கள்


J.Isaac
ஏப் 25, 2024 20:20

இது தான் பாஜக ஆளும் உபி மாநில வளர்ச்சி


hari
ஏப் 25, 2024 20:59

புதிய ரக கோதுமை பீர் தயார்... என்ஜோய் உபிஸ்.......


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை