உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிபுராவில் வெள்ளம், நிலச்சரிவு: 10 பேர் பரிதாப பலி; 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

திரிபுராவில் வெள்ளம், நிலச்சரிவு: 10 பேர் பரிதாப பலி; 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

அகர்தலா: திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், 10 பேர் உயிரிழந்தனர். 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திரிபுராவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. ஞாயிற்றுக்கிழமை முதல் அதிக மழை பெய்து வருவதால், அனைத்து முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் ஏற்கனவே அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது. தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். முஹீரி, லாகேங் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மீட்புப் பணிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார். இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், 10 பேர் உயிரிழந்தனர். 330 நிவாரண முகாம்களில் 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். முதல்வர் மாணிக் சாஹா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உதவி கோரினார். மீட்புப் பணிகளுக்கு உதவ கூடுதலாக, நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மாநிலத்திற்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை