உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்த பொருளாதாரத்தில் இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!

இறந்த பொருளாதாரத்தில் இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இறந்த பொருளாதாரம்' என்று டிரம்ப் வசைபாடிய இந்தியாவில், அவரது கட்டுமான நிறுவனம், ஒரே ஆண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. 'இந்தியாவின் பொருளாதாரம் இறந்து போய்விட்டது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உளறிக்கொட்டியது, உலகம் முழுவதும் இருக்கும் தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோதும், இந்தியப் பொருளாதாரம் மட்டுமே ஒளிர்ந்து வருவதாக, உலக வங்கி, ஐ.எம்.எப்., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பாராட்டி வருகின்றன.அப்படியிருக்கையில், இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் வர்ணித்து இருக்கிறார். அவர் கூறியது அப்பட்டமான பொய் என்பதற்கு, இந்தியாவில் அவரது நிறுவனங்களின் முன்னேற்றமே சாட்சியாக உள்ளது.இந்திய கட்டுமானத்துறையில் அவரது நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடந்தாண்டு வரை (அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் முன்பு) டிரம்ப் நிறுவனம் இந்தியாவில் ரூ.175 கோடி வருமானம் ஈட்டியிருந்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக இந்த நிறுவனம் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறது.2024ம் ஆண்டு நவ.5ம் தேதிக்கு பின்னர், (அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு) இதே டிரம்ப் நிறுவனம், த்ரிபேகா என்ற கட்டுமான நிறுவனத்திடம் கைகோர்த்து குர்கான் பகுதியில் 6 கட்டுமான திட்டங்களை கையகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.இந்திய கட்டுமானத் துறையில் டிரம்ப் நிறுவனம் 2011ல் கால் பதித்தது. கடந்தாண்டு வரை 3 மில்லியன் சதுர அடி மட்டுமே கட்டிய இந்த நிறுவனம், கடந்த ஓராண்டில் மட்டும் 11 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது. இது, கிட்டத்தட்ட மும்முடங்கு வளர்ச்சியாகும். புதிய திட்டங்கள் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை வாய்ப்புகள் டிரம்ப் நிறுவனத்துக்கு இந்தியாவில் உருவாகி உள்ளன.அண்மைக்கால திட்டங்கள் மூலம் டிரம்ப் கட்டுமான நிறுவனம் பெற்ற வருவாய் என்பது இன்னமும் கணக்கிடப்படவில்லை. ஆனால் கடந்தாண்டை ஒப்பிட்டால் நிச்சயம் அசுர வளர்ச்சி என்கின்றனர் இதை நன்கு அறிந்தவர்கள். உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா இருப்பதும், எந்தவித பொருளாதார ஏற்ற, இறக்கங்களில் கட்டுமானத் துறை சிக்கிக் கொள்ளாததே இதற்கு காரணிகளாக இருக்கின்றன என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.2023ம் ஆண்டு டிரம்ப் அதிபராக பதவியில் இல்லாத போது, அவரின் நிறுவனத்திடம் கைகோர்த்திருந்த 3 கூட்டாளி நிறுவனங்களின் கட்டுமான ஒப்பந்ததாரர்கள், ஹரியானாவில் நீதித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிக்கினர். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பது தனிக்கதை.2011ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக வியாபாரத்தில் இறங்கிய போது, ரோஹன் லேண்ட்ஸ்கேப் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து, மும்பையில் உள்ள சவ்பட்டி என்ற இடத்தில் 40 முதல் 60 மாடிகள் கொண்ட கட்டடத்தை கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், விதிகளை மீறி கட்டுமானங்களில் இறங்கியதால் மஹாராஷ்டிரா அரசாங்கம் கட்டுமான அனுமதியை ரத்து செய்தது. டிரம்ப் நிறுவனத்தின் தற்போதைய கட்டுமானத் திட்டங்கள் பட்டியல்; மொத்தம் 6 திட்டங்களில் 2 திட்டங்கள் முழுமை பெற்றுவிட்டன. புனேவில் 23 மாடிகள் கொண்ட டிரம்ப் டவர் என்ற அடுக்குமாடி வளாகம் (இதன் மதிப்பீடு ரூ.300 கோடி, 4 லட்சம் சதுர அடி) கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இதே போல் மும்பையில் ரூ.3000 கோடியில் 76 மாடிகள் கொண்ட கட்டடம் (உத்தேசமாக 9 லட்சம் சதுர அடி) ஆகிய திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. கொல்கத்தாவில் ரூ.400 கோடியில் 4 லட்சம் சதுர அடியிலும், குர்கானில் ரூ.1900 கோடியில் 12 லட்சம் சதுர அடியிலும் செயல்பாட்டில் இருக்கும் கட்டுமானங்கள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
ஆக 06, 2025 18:12

பொருளாதார வளர்ச்சி மக்களை சென்றடையவில்லை. ஆளாளுக்கு கார்பரேட் ஆட்டை நடக்கும் இந்தியாவில் ட்ரம்ப் பூந்து ஆட்டை போட்டதில் என்ன ஆச்சரியம்? இதனால் பொதுமக்களுக்கு பெரிய பயன் இல்லை. அதுவே டெட் எக்கானமி. ரஷ்யாவிலும் உக்ரைன் போரினால் உபயோகமில்லை. ஆளுங்க சாவறதால அதுவும் டெட் எக்கானமி.


Barakat Ali
ஆக 06, 2025 21:28

இந்தியாவின் பொதுமக்களுக்கு பொருளாதார உயர்வின் பலன்கள் சென்றடையவில்லை என்று டிரம்ப் கண்ணீர் விட்டு ,கவலைப்பட்டு பேசியிருக்கிறார் என்கிறது இந்த திமுகவின் கொத்தடிமை ......


Madras Madra
ஆக 06, 2025 17:23

ஓ அதான் ராகுல் பாபா இப்படி ஊளை இடுதா அவருக்கு எவ்ளோ ன்னு தெர்ல


Rajan A
ஆக 06, 2025 17:09

அது வேற வாய் இது வேற வாய்னு வடிவேலு ஜோக் மாதிரி இருக்கு. பணம் பண்ண இந்தியா வேண்டும். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்


K V Ramadoss
ஆக 06, 2025 16:39

டிரம்புக்கு தாளம் போடும் ராஹுலைப் பற்றி என்ன சொல்ல ?


Apposthalan samlin
ஆக 06, 2025 16:10

டாலர் பாதிப்பு 87.67 இதின் அர்த்தம் என்ன ? இது என்ன பொருளாதாரம் ?


vivek
ஆக 06, 2025 17:28

அப்போதலா...ஏற்றுமதி இருக்குமதி டாலர் என்றால் என்ன தெரியுமா....ஏற்றுமதி டாலர் லாபம் தெரியுமா...


Shekar
ஆக 06, 2025 18:16

தம்பி அங்கே ஒரு முட்டையின் விலை $௦.30, நம்மவூர் காசுப்படி 26 ரூபாய், இங்கே 5.50 ரூபாய்க்கு முட்டை கிடைக்கிறது. இதே போல் தான் அரிசி பருப்பு விலையும். இது என்ன பொருளாதாரம். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சவால் விடும் ஈரானின் ரியால் மதிப்பு ஒரு டாலர் 42.125 ரியால்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2025 16:01

ஓ இதனால் தானோ பாகிஸ்தான் இடம் சொல்லி இந்தியாவுடன் சண்டை போட வேண்டாம் என்று தடுத்து விட்டாரோ. எங்கே பாகிஸ்தான் குண்டு வீசி தன் கட்டுமானங்கள் சேதமானால் 15000 கோடி காணமல் போய் விடுமோ என்று பயந்து நிறுத்த சொல்லி இருப்பார். பின் குறிப்பு துண்டு சீட்டு வைத்து கொண்டு தப்பு தப்பாக பேசுபவருக்கு இந்த கட்டுமான கதை தெரியுமா. தெரியாது என்று நினைக்கிறேன் தெரிந்திருந்தால் ஓடிப் போய் இங்கு கூட்டி வந்திருப்பார். நிலம் வைத்திருப்போர் தங்கள் டாக்குமெண்ட் சரி பார்த்து கொள்ளவும். இன்னும் சில மாதங்களில் டிரம்ப் அடுக்கு மாடி குடியிருப்பு டிரம்ப் வணிக வளாகம் வந்தாலும் வந்து விடும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 06, 2025 15:34

பாஸ் நாங்கள் இப்போது மார்க்கெட்ல வாங்க அரம்பிச்சி இருக்கோம் , என்னால் முடிந்தது 2 லக்சம் , SIP அதிக படுத்தி இருக்கேன் ,டாடா மிக சிறந்த இந்தியன் இப்போது 4 பில்லியன் டாலர் iveco டிரக் கம்பெனி வாங்கிட்டாங்க , நம்ம பொருளாதாரம் பத்தி ராவுல் டிரம்ப் யாரும் பேச தேவை இல்ல , உழைத்து வாங்குவோம் ,உட்காந்து ஊரை அடிச்சி கம்பெனி வாங்க ஒன்னும் கட்டுமரமோ வேற எவனோ இல்லை


V.Mohan
ஆக 06, 2025 14:46

நீங்க வேற.நம்ம விடியல் முதல்வருக்கு துண்டு சீட்டு எழுதி தர அதுல வர்ற செய்தி உண்மையோ கற்பனையோ,ஒரு குரூப்பே வேலை செய்யுது. அதே மாதிரி தடாலடி விஷயங்களை டிரம்புக்கு ஞாபகத்தில் வைக்க ஒரு குரூப் இருக்கும் போல. ஏன்னா அவுங்க டிரம்பு பேசுன விஷயங்களை சுத்தமாக மறந்து ஏன்னா இவர் கேசுவலா நிறைய பேசுவாரு, செய்ய மாட்டாரு புது தடாலடி,விஷயங்களை அவருக்கு பாடம் சொல்லி பேச வைச்சுடுவாங்க. நாட்டுல நடக்கற பல விஷயங்கள் அவருக்கு தெரியவே தெரியாது. ஹூம் . நல்ல ஜனாதிபதி


Abdul Rahim
ஆக 06, 2025 15:08

டெலிபிராம்டர் பார்த்து மேடைகளில் பேசுற தற்குறிக்கு சப்போர்ட்டா


vivek
ஆக 06, 2025 16:37

அதைவிட துண்டு சீட்டு மோசம்...சுய அறிவும் இல்லையே பாய்


Shekar
ஆக 06, 2025 18:43

துண்டு சீட்டு பார்த்தும் தப்பும் தவறுமாய் படிப்பது, 86+9=97, டிசம்பர் 25 சுதந்திரதினம் இதெல்லாம் உன் தலைவரின் சிறந்த நுண்ணறிவு அப்படித்தானே .


Rengaraj
ஆக 06, 2025 14:46

முதலில் டிரம்ப் ஒரு வியாபாரி பிறகுதான் அவரை தனது தாய் நாட்டின் மீது பற்று கொண்ட அதிபர் என்று பார்க்கவேண்டும். நாட்டை காட்டிலும் தற்போது தனது தொழில், தனது வியாபாரம் என்ற கொள்கையை முன்னிறுத்தி அதிபர் என்ற போர்வையில் உலகமெங்கும் தனது அதிகாரத்தை செலுத்த நினைக்கிறார் என்று தோன்றுகிறது. நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் அமெரிக்கா தற்போது உள்ளது. ஆனால் அவருக்கு இருப்பதோ அடுத்த மூன்றரை ஆண்டுகள் மட்டுமே. அடுத்த தேர்தலில் இவரை மக்கள் அதிபராக நிச்சயம் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் . இருக்கிற பதவியில் இருக்கிற காலம் வரை தனது வியாபாரம் செழுமையாக நடக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது அவருக்கு வேண்டுமென்றாலும் சரியாக இருக்கலாம். ஆனால் சட்டதிட்டங்கள் நாட்டுக்கு நாடு மாறுகிறதே ? இல்லாவிடில் அவரது கூட்டாளி நிறுவனம் இங்கே வழக்குகளை சந்திக்குமா ? ஏதோ பிரச்சினையில் அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் மாட்டி மோடியின் அரசு அதை தீர்க்க உதவவில்லை என்ற காரணத்தால் அவர் இந்தியாவை சாடுகிறார் என்றல்லவா தோன்றுகிறது. ராஜாங்க ரீதியான உறவுமுறைகளுக்கும் , இங்குள்ள அரசியல் பிரச்சினைகளுக்கும் முடிச்சு போட்டு பார்ப்பது அறிவீனம் என்று கூடவா அமெரிக்க அதிபருக்கு தெரியாது ??


VSMani
ஆக 06, 2025 17:31

அடுத்த தேர்தலில் இவரை மக்கள் அதிபராக நிச்சயம் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ரெங்கராஜ், அடுத்த தேர்தலில் டிரம்ப் நிற்கமுடியாது. அமெரிக்காவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்கமுடியும்.


Ramesh Sargam
ஆக 06, 2025 14:18

இதெல்லத்தையும் எடுத்து சொல்லோணும் தம்பி அந்த புத்தி கெட்டவனுக்கு. செந்தில் - கவுண்டமணி பட டைலாக் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை