உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செக் பவுன்ஸ் வழக்கில் திருப்பம்: அமைச்சர் தண்டனை நிறுத்தி வைப்பு

செக் பவுன்ஸ் வழக்கில் திருப்பம்: அமைச்சர் தண்டனை நிறுத்தி வைப்பு

பெங்களூரு : காசோலை பவுன்ஸ் வழக்கில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.கர்நாடகா பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா. இவர், ஆகாஷ் ஆடியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய, 6.60 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை 'பவுன்ஸ்' ஆனது. இது தொடர்பாக, 2011ல் அந்நிறுவனம் சார்பில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு மீது தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.இதற்கிடையில், கடந்த டிசம்பர் 29ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் மது பங்காரப்பா குற்றவாளி என்று அறிவித்தது.அபராத தொகை உட்பட மொத்தம் 6.96 கோடி ரூபாய், ஒரு மாதத்திற்குள் புகார்தாரருக்கு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பெங்களூரு 56வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், அமைச்சர் மேல்முறையீடு செய்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் நாராயண் ஹெக்டே, 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. மேல்முறையீடு தொடர்பாக, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' வழங்கும்படி கூறி, வழக்கு விசாரணையை பிப்., 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி